Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அப்பாவின் மீசை

சொல்வனம்

அப்பாவின் மீசை

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

விரதச் சாப்பாடென்றால்

விரும்பிச் சாப்பிடும்

ஜவ்வரிசிப் பாயசம்

கடைசிநாள்களில் அதிகம் சாப்பிட்ட

கொட்டைப்பேரீச்சம்பழமென

பார்த்துப்பார்த்து

அப்பாவின் நினைவுநாளில்

படையலிட்டாள் அம்மா

அப்பாவுக்கு

பாகவதர் கணக்காய் சுருட்டைமுடி

பாரதிமாதிரி முறுக்கு மீசை

ஆனாலுமென்ன

தேன் தடவினா நரைக்குமுன்னு

யாரு தங்கம் சொன்னதுன்னு

விரலில் தேனெடுத்து

வேடிக்கையாய் நீவியதால்

அடுத்த வாரமே

வெள்ளை மீசையோடு பல்லிளித்த

அப்பாவின் ஞாபகங்களை

அசைபோட்டபடியே

அசந்துபோய் உட்கார்ந்தாள்

அப்பா படத்துக்குமுன்னே

அம்மா.

- காசாவயல் கண்ணன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சொல்வனம்

காலம்

இடையூறுகள்

பருத்த உடலுடன்

வாழ்க்கை வீதியில்

திரிந்துகொண்டு இருக்கின்றன

இப்போது எனக்கு

சரியாக இருக்கும்,

வல்லூறின் சிறகு பொருத்திக்கொள்வது.

- க.அய்யப்பன்

கம்பளிப்பூச்சியாகிய நான்

வீட்டின் கொல்லையில்

ஒரு முருங்கை மரம் இருந்தது.

பக்கத்து வீட்டு ஆறுமுகத்தின்

யோசனையின் பேரில்,

ஒரு நாள் அம்முருங்கை மரத்தின்

அடித்தண்டில் அடையாய்

ஆக்கிரமித்திருந்த கம்பளிப்பூச்சிகளை,

குச்சியின் முனையில் துணி சுற்றிய

தீக்கிரீடம் கொண்டு பொசுக்கித் தள்ளினேன்.

அலறல் சத்தம் ஏதுமின்றி

அவை சுருண்டு கருகின.

தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்தேன்

அன்றிரவு.

“எறும்பைக்கூட வதைக்காதவன் என்று

வெளியில் சொல்லித் திரிந்தாயே அப்பா!” என்று

என் பக்கத்தில் படுத்திருந்த

பட்டாம்பூச்சிகள் என்னைப் பழித்தன.

இப்போதும்

அதே இடத்தில்

அதே முருங்கை மரம் இருந்தது.

நானும், பக்கத்து வீட்டு ஆறுமுகமும்,

இன்னும் பெயர் தெரியாத பல கம்பளிப்பூச்சிகளும்

அதே அடித்தண்டில் அடையாய்

ஆக்கிரமித்திருந்தோம்.

திடுமென தீக்கிரீடம் ஒன்று நெருங்கி வந்தது.

கனவோ என்று என்னை நானே கிள்ளிப் பார்த்தேன்.

கிள்ளிய இடத்திலிருந்து

சில கம்பளி இழைகள் உதிர்ந்தன.

- சா.நாதன் ரவிகுமார்