Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

காத்திருத்தல்

சொல்வனம்

காத்திருத்தல்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

வெறிச்சென இருக்கும்

நிர்மலமான நீலவானத்தில்

தனியாய்ப் பறந்து போகும் பறவையொன்று

பேரழகாக்கிவிடும் வானத்தை

ஆங்காங்கே தண்ணீர் நிற்கும்

யாரும் நடந்து போய்க்கொண்டிருக்காத

சாலையில்

மழைபெய்யவில்லையென்றாலும்

குடைபிடித்து நடந்து போகும் பெண்ணொருத்தி

பேரழகாக்கிவிடுவாள் அச்சாலையை

சொல்வனம்

தண்ணீரூற்றி ஊற்றி

எப்போதடா பூக்குமென

பார்க்கும்போதெல்லாம் சலித்துக்கொள்ளும்

செடியொன்றில்

ஓர் அதிகாலையில்

அத்தனை பச்சை இலைகளுக்கு நடுவே

அடர் பிங்க் நிறத்தில் தோன்றும்

ரோஜா ஒன்று

பேரழகாக்கிவிடும் அச்செடியை

மணலள்ளி மணலள்ளி

உடலெங்கும் காயப்பட்டு

அலங்கோலப்பட்டுக்கிடக்கும் ஆற்றில்

திடீரென மழை பெய்து

கரைகள் தழுவ வரும் வெள்ளம்

பேரழகாக்கிவிடும் ஆற்றை

பார்த்தாலே கண்களை மூடி

தலைதிருப்பிக்கொள்ளச் செய்தபடி

மரத்திலூரும் கம்பளிப்புழு

வண்ணங்கள் தடவிய சிறகுகளோடு

அதே செடியில் வந்தமர்கையில்

பேரழகாக்கிவிடுகிறது காட்சியை

அழகுக்கு

கொஞ்சம் காத்திருக்கவேண்டும்

பேரழகுக்கு

இன்னும் கொஞ்சம் காத்திருக்கவேண்டும்

அவ்வளவே.

- சௌவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சொல்வனம்

நிரந்தர அமைதிக்காய் அலையும் பறவை

கூடு கட்ட முயலும் குருவிக்கு

நினைத்தவுடனே நான்கைந்து காய்ந்த குச்சிகள்

கண்ணில்பட்டுவிட்டன.

சிறிதுதூரம் பறந்தவுடன்

சில வைக்கோல் துண்டுகள் கிடைத்தன.

காய்ந்த புற்களுக்காகத்தான் ஒருகாத தூரம்

அது பயணிக்க வேண்டியிருந்தது.

கூடமைக்கத் தேவையான பொருள்களுடன்

நெடுங்காலமாய் ஒரு நிரந்தர அமைதி பொருந்திய

இடமாய்த் தேடியலையும்

அந்தக் குருவியைக் காணநேர்ந்தால்

உங்களின் சத்தத்தையோ அல்லது

இரைச்சலையோ

வாகன அரவங்களையோ

கொஞ்சம் நிறுத்தி மௌனமாக்கிக்கொள்வீராக...

- சாமி கிரிஷ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்குறிப்பு

காணாமல்போன ஒருவனை

கண்டுபிடிக்கும் பொறுப்பு

ஒப்படைக்கப்பட்டிருக்கிறது எனக்கு

சொல்வனம்

அவன் குறித்த அங்க அடையாளங்களைப்

பதிவு செய்துகொள்ள

குறிப்பேடுகள் கொடுக்கப்பட்டன

அடையாளமெனச் சொல்லப்பட்ட யாவுமே

இதற்குமுன் யார்சொல்லியோ

பார்க்கப்பட்டதாகவோ அல்லது

எழுதப்பட்டதாகவோ தோன்றியதெனக்கு

குற்றங்களைக் குறித்துக்கொண்டிருக்கிறேன்

குற்றமெனச் சொல்லப்படுபவையாவும்

குற்றமேயில்லையென

மனம் விலக்கிக்கொண்டிருக்கிறது

தேடலின் பொருட்டு

சற்று நாள்களாய்

தொலைந்துபோயிருக்கிறேன் நானும்...

கடவுச்சீட்டளவு அச்சடிக்கப்பட்டு

நாளிதழ்களில் பிரசுரமாயிருக்கும்

காணாமல்போனவர் பற்றிய விவரத்தில்

யாரோ பொருத்திப்பார்க்கக்கூடும்

என்னைப்போலவே எனதடையாளங்களையும்

பின்குறிப்பாய்...

- பன்னீர்.மு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism