பிரீமியம் ஸ்டோரி

பித்தேறித்திாியும் ஒருவனை

தெருமுக்கில் சந்திக்க நோிட்டது

கருவேலம்பூக்களைப் போலக் கண்களாலும்

பித்தளைப் பற்களாலும்

சிாிப்பு சிாிப்பு

இடைவிடாத சிாிப்பு

நாம் உபயோகமற்றதெனத்

தூக்கியெறியும் நெகிழிப்புட்டியிலிருந்து

துண்டுபீடிவரை

அத்தனையும் அவன்

பொக்கிஷமெனச் சுமந்துகொண்டிருந்தான்

நம் பாவங்களைச் சுமக்க வந்த

தேவனைப்போலிருக்கும்

அவன் பசிக்கு

இப்பெருநகாிலும் சோறிடும்

கரங்களை ஒருகணம்

இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

- வெள்ளூர் ராஜா

பறவைகள்
பறவைகள்

பறவைகள் சொல்லாத ரகசியங்கள்

வானத்திற்கும் பறவைகளுக்குமான உறவு

பறத்தலில் இருக்கிறது

பூமிக்கும் பறவைகளுக்குமான உறவு

உணவில் இருக்கிறது

வானத்தின் ரகசியங்களை பூமியும்

பூமியின் ரகசியங்களை வானமும்

கிளறுவதேயில்லை

பறவைகளும் சொல்வதேயில்லை

பகலை வானத்திற்கும்

இரவை பூமிக்கும்

கொண்டுசெல்வதில் இருக்கிறது

அத்தனை ரகசியங்களும் பறவைகளிடம்.

- வலங்கைமான் நூர்தீன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பார்வை

நீங்கள் எப்போதும்

அழகையும் அருவருப்பையும்

நடுநிலைப்படுத்தத் தவறிவிடுகிறீர்கள்

அதனால்தான்

சாணம்மீது அமரும் பட்டாம்பூச்சிகளையும்

பூமீது அமரும் ஈக்களையும்

உங்கள் கண்கள்

பார்க்க மறுத்துவிடுகின்றன.

- ஹரிகரன்

சிலேட்டில் பூக்கும் கனவு

சிலேட்டில் மகள் வரைந்த

வயல்வெளிகளில்

பெருகி ஊர்கின்றன ரயில்பூச்சிகளும் நத்தைகளும்

மழைக்காலங்களின்

தூதர்களாய்.

புல்வெளிகளும் மரங்களும்

ஒரே நாளில் வளர்ந்து பெருத்து

பொழிகிறது நிலமெங்கிலும்

பசுமை நிழல்.

குருணைமருந்தும் பூச்சிக்கொல்லிகளும் களைக்கொல்லிகளும் அறியா உலகில்

மகள் வரைந்த பூச்சிகள்

பன்னாட்டு அச்சுறுத்தல் இன்றி

கனவுகாண்கின்றன.

யூரியாவும் கலப்புரங்களும் இறக்குமதி ஆகாத நிலத்தைத் தன் தலைமுறைக்குக் காட்ட அடம்பிடிக்கிறது

ஆசையோடு பைக்குள் சிலேட்டை வைக்கிறாள்.

அட்டைப்பூச்சிகள் அருவருப்புதான் என்றாலும்

மகளின் உலகில் அழகியல் பிரதிநிதிகளாய் வலம்வருகின்றன

புத்தகங்களுக்குள் பூச்சிகள்

மேய்கின்றன.

மகளின் மன வயல்களில் பாட்டன்களின் கனவுகள் பூப்படைகின்றன

ஆதிநிலங்களின் விதைகளைத்தேடி.

- சதீஷ் குமரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு