Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அழைப்பு மணி

சொல்வனம்

அழைப்பு மணி

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

விளையாட்டுக்கேனும்

அடித்துவிட்டுச் செல்லுங்களேன்

யாரேனும் அந்த அழைப்பு மணியை...

எவ்வளவு நேரம்தான்

துணிகளோடும் தூண்களோடும்

உரையாடிக்கொண்டிருப்பது...

தோட்டப் பூச்செடி

சிரித்த வண்ணம்

இருக்கிறதே தவிர

எதிர்த்து ஒரு வார்த்தையையும்

எனக்கு அனுப்புவதேயில்லை

எப்போதுமே...

சொல்வனம்

அந்தப் பூனைக்குட்டிக்கு

எப்போதும் சுயநலம்தான்

கொஞ்சச் சொல்லி

மடியில் படுத்துக்கொள்ளும்

தேடச் சொல்லி

சேலையில் ஒளிந்துகொள்ளும்...

வேகப் பட்டுவாடாவில்

நொடி தரிசனமாகும்

தபால்காரரின் உரத்த குரலும்

பால்காரரின் பழகிய முகமும்

நாளுக்கொரு தரம் மட்டுமே...

நகரத்தில் தனிமையை

நாமாக ஏற்றுக்கொள்வது

நரகத்தின் சாயலை

நம்மீது திணிப்பதாகுமோ..?

அக்கம் பக்கத்து வீடெல்லாம்

அடைத்தபடியே இருக்க - அங்கேயும்

தேவைப்படலாம் இந்த வாசகம்...

விளையாட்டுக்கேனும்

அடித்துவிட்டுச் செல்லுங்களேன்

யாரேனும் அந்த அழைப்பு மணியை...

- கனகா பாலன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனந்தியின் காக்கை

த்துணவு முட்டையை

கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்த்து

காக்கைக்கு வைத்துக்கொண்டிருந்தாள் ஆனந்தி

அவளுக்கு அருகிலிருந்த

காகம்

சுற்றும் முற்றும் பார்த்தபடி

ஒவ்வொரு அலகாய் விழுங்கியது

அவசரமாய் கையை உயர்த்தி

காக்கையை விரட்டிவிட்டுத் திரும்புகிறேன்

போக்கு காட்டிவிட்டு

மீண்டும் அவளருகே

உட்கார்ந்துவிட்டது

உணவுக்குப் பிறகு

ஆனந்தியின் கையசைப்பில்

இறக்கையை அடித்து

டாட்டா காட்டிவிட்டுப் பறக்கிறது

அவளுக்கும் காக்கைக்கும்

இடையே உள்ள மொழி

தெரியாத என்னை

ஆசிரியர் என்றும்

ஆனந்தியை

ஆறாம் வகுப்பு மாணவி என்றும்

நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

நினைப்பில் கறுப்புமை

பூசிப்போகிறது

ஆனந்தியின் காக்கை.

- மு.மகுடீசுவரன்

முடிவு

ந்தச் சிறுகதையை

வாசிக்கத் தொடங்கும் முன்

அது கிட்டத்தட்ட

அவனின் கதை என்பதை

அவன் அறிந்திருக்கவில்லை.

வாசிக்கத் தொடங்கிய

சில பத்திகளில்

பத்து வருடங்களுக்கு முன்பு

இவனெடுத்த பெரிய முடிவொன்றை

அந்தக் கதையின் நாயகி எடுத்தாள்.

அதற்குப் பின்பான பக்கங்களில்

அதற்கான காரணம் வேறு என

அறிய முடிந்தது.

இறுதியில், அவள் எடுத்த முடிவு

தவறென்பதை உணர்ந்து

முடிவை மாற்றிக்கொண்டதாகக்

கதை முடிகிறது

கதையைப் படிப்பதற்கு முன்பு வரை

அவன் அந்த முடிவு தவறு எனக்

கருதியதேயில்லை..!

- ஜெகதீஷ்