Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

உப்பு சரியாகப்போட்டுவிடும் கை தன்னுடையது என்று பெருமைதான் அம்மாவுக்கு.

சொல்வனம்

உப்பு சரியாகப்போட்டுவிடும் கை தன்னுடையது என்று பெருமைதான் அம்மாவுக்கு.

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

துணை

தனது நிழலைப் பிடித்து இளைப்பாறும் தொனியில்

வெக்கை வழிய

நடந்தபடியிருக்கிறான் மனிதன்.

- சாமி கிரிஷ்

****

உப்புச்சுவை

கொடுக்கல் வாங்கலுக்கு

வழியிலாது

உயர்ந்துவிட்ட மதில் சுவர்கள் தாண்டி

அந்தப்பக்க பங்காளி வீட்டு சமையலறையில்

கொதிக்கும் குழம்பில் உப்பு குறைவு என்று

இங்கிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறாள் அம்மா

உப்புச்சப்பற்றுப்போன உறவைப்பற்றிதான்

கருத்து ஏதுமில்லை

மற்றபடி

நடுவில் நின்ற பலாமரம்

இருபக்க சந்தும் சேர்த்து

ஏழடி

ஒரு கடை கட்டி விட்டதில்

எவனோ பிரியாணிக் கடை போட்டிருக்கிறான்

மசாலா வாடையடிக்கும்

வாடகைப்பணத்தில்

வைக்கும் குழம்பில்

உப்பு சரியாகப்போட்டுவிடும்

கை தன்னுடையது என்று பெருமைதான் அம்மாவுக்கு.

- உமா மோகன்

சொல்வனம்

உறங்கும் தேசம்

உறவுகள் விழுங்கப்பட்ட

நிலத்தின் ஏப்பம்

சற்றும் தணியவில்லை

கொதித்துக்கொண்டு ஆறாக

ஓடும் குருதியின் நிறம்

ஒரு பயங்கர விம்பத்தை நினைவுறுத்துகிறது

தோண்டத் தோண்ட

எலும்புகள் கடவுளின் படங்கள்

அரிக்கண் லாம்புகள்

துப்பாக்கி ரவைகள்

அம்மணத்தைக் காக்கத் தவறிய

உள்ளாடைகள் புதைந்து கிடந்தன

முறிந்த பனைமரம் கெட்டுடைந்த

பூவரசமரங்களின் காயங்கள்

அழிந்த நிலையில்

மீள உருவாக தன்னைத் தானே

கொத்திக் கொத்தித் தின்று

நினைவுபடுத்துகின்றன தூங்கும் தேசத்தை.

- என். நிலவிந்தன் வவுனியா

******

சிறார் உலகம்

இயக்குபவரின் மறதியால்

நிரம்பி வழிகிறது

சிற்றூரொன்றின்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

அதில் நனைந்தாடும்

சிறார்களுக்கு மட்டும்

கோடையில் வந்துபோகிறது

கொஞ்சநேரம் கார்காலம்.

- பழ.மோகன்