நாங்களும் அவரும்

அவருக்கு இளையராஜாதான் பிடிக்கும்,

என்னைப்போலவே!

ராஜாவின் பாட்டில்லையெனில்

ரேடியோவைச் சட்டென ஊமையாக்குவார்,

என்னைப்போலவே!

இசைத்தட்டு, ஒலிநாடா, குறுந்தகடு,

நினைவக அட்டை

என்று தொழில்நுட்ப மாறுதல்கள் நடந்தாலும்

அவர் மாறாமல் சேமிப்பது இளையராஜா பாடல்களைத்தான்,

என்னைப்போலவே!

இளையராஜா பற்றிப் பேச எவ்வளவோ விடயங்கள் அவரிடம்,

என்னிடமும்!

மருத்துவமனையில் சாவின் நெருக்கத்தில் இருந்தபோதும்,

இவ்வளவு இளையராஜா பாட்ட விட்டுட்டு எப்படிடா போவேன்

என்று அவர் சொன்னது நான் சொல்வது போலத்தான் இருந்தது.

இதோ, திரும்பியாச்சு!

அதோ மயானம் தெரிகிறது

எறக்குங்கப்பா! என்ற குரல் கேட்டு அவரை இறக்கி வைத்தார்கள்.

பணிச்சவன் தன் பாறைக் குரலில் பாடிய

அவருக்கான கடைசிப் பாட்டுக்கு,

அவர் கண்டிப்பாய்

செவி சாய்த்திருக்கமாட்டார்!

எனக்குத் தெரியும்,

அந்த அரிச்சந்திரன் பாட்டில் இளையராஜா இல்லை.

- சா.நாதன் ரவிகுமார்.

நீட்சி

ஒருநாள் வந்த மழையை

இரண்டு நாள்களாகச்

சொல்லிக்கொண்டிருக்கின்றன

ஓலைக்குடிசைகள்.

- திருவெங்கட்

சொல்வதற்கு ஒரு காது

எண்ண அலைகளுக்குள்

மிதக்கின்றன சொற்கள்

முக்காலத்தின் பிரதிநிதிகளாய்

அவை தேடுவது

ஒரு காது

வளைந்து நெளிந்து

ஓடும் நதி

பெரும் பள்ளத்தின்

ஆழம் அறியாமலே

சட்டென வீழ்ந்து

இரைவது போல்

காதொன்று கிடைத்ததும்

கொட்டத் தொடஙகுகின்றன

சொற்கள்

நல்ல காது

நிதானித்துக் கேட்கும்

பிடிக்காமல் போய்விடும்

காதுகளுக்கு

கேட்பதற்கான

பொறுமையோ சகிப்புத்தன்மையோ

இல்லையென ஆகிவிடுகிறது

பிரிவுத்துயர்

வருத்துவதற்கு

ஆகப்பெரிய காரணம்

காதுகள்.

- எஸ். விஜயலக்ஷ்மி

நாங்களும் அவரும்

அவருக்கு இளையராஜாதான் பிடிக்கும்,

என்னைப்போலவே!

ராஜாவின் பாட்டில்லையெனில்

ரேடியோவைச் சட்டென ஊமையாக்குவார்,

என்னைப்போலவே!

இசைத்தட்டு, ஒலிநாடா, குறுந்தகடு,

நினைவக அட்டை

என்று தொழில்நுட்ப மாறுதல்கள் நடந்தாலும்

அவர் மாறாமல் சேமிப்பது இளையராஜா பாடல்களைத்தான்,

என்னைப்போலவே!

இளையராஜா பற்றிப் பேச எவ்வளவோ விடயங்கள் அவரிடம்,

என்னிடமும்!

மருத்துவமனையில் சாவின் நெருக்கத்தில் இருந்தபோதும்,

இவ்வளவு இளையராஜா பாட்ட விட்டுட்டு எப்படிடா போவேன்

என்று அவர் சொன்னது நான் சொல்வது போலத்தான் இருந்தது.

இதோ, திரும்பியாச்சு!

அதோ மயானம் தெரிகிறது

எறக்குங்கப்பா! என்ற குரல் கேட்டு அவரை இறக்கி வைத்தார்கள்.

பணிச்சவன் தன் பாறைக் குரலில் பாடிய

அவருக்கான கடைசிப் பாட்டுக்கு,

அவர் கண்டிப்பாய்

செவி சாய்த்திருக்கமாட்டார்!

எனக்குத் தெரியும்,

அந்த அரிச்சந்திரன் பாட்டில் இளையராஜா இல்லை.

- சா.நாதன் ரவிகுமார்.

நீட்சி

ஒருநாள் வந்த மழையை

இரண்டு நாள்களாகச்

சொல்லிக்கொண்டிருக்கின்றன

ஓலைக்குடிசைகள்.

- திருவெங்கட்

சொல்வதற்கு ஒரு காது

எண்ண அலைகளுக்குள்

மிதக்கின்றன சொற்கள்

முக்காலத்தின் பிரதிநிதிகளாய்

அவை தேடுவது

ஒரு காது

வளைந்து நெளிந்து

ஓடும் நதி

பெரும் பள்ளத்தின்

ஆழம் அறியாமலே

சட்டென வீழ்ந்து

இரைவது போல்

காதொன்று கிடைத்ததும்

கொட்டத் தொடஙகுகின்றன

சொற்கள்

நல்ல காது

நிதானித்துக் கேட்கும்

பிடிக்காமல் போய்விடும்

காதுகளுக்கு

கேட்பதற்கான

பொறுமையோ சகிப்புத்தன்மையோ

இல்லையென ஆகிவிடுகிறது

பிரிவுத்துயர்

வருத்துவதற்கு

ஆகப்பெரிய காரணம்

காதுகள்.

- எஸ். விஜயலக்ஷ்மி