அடுக்ககத்தின் கார் சகடங்களுக்கு

தன் முதற்குட்டியைப் பறிகொடுத்த

நாயொன்று

நேற்று பெய்த

பெருமழையில்

அதே காருக்கு அடியில் தஞ்சமடைகிறது

இரண்டாம் குட்டியுடன்,

எஞ்சியிருக்கும் மானுடத்திடம்

சற்றே காருண்யத்தை எதிர்பார்த்து...

நீட்டப்பட்ட துடைப்பத்துடன்,

அண்டிய சிறுகுடும்பத்தை

விரட்ட எத்தனிக்கிறது

மாடிவீட்டுக் கையொன்று...

மொழி புரியா நோக்கு கொண்டு

நீர்த்திவலை விழிகளுடன்

அமர்ந்திருந்தார் முதிய காவலாளி

வடகிழக்கிலிருந்து

புலம்பெயர்க்கப்பட்டதை

எண்ணிக்கொள்கிறாரோ என்னவோ...

- அனலோன்

திரவ முத்தங்கள்

பள்ளிக்குச் செல்லுமுன்

வீடெல்லாம்

சிந்திவிட்டுப்போயிருக்கும்

சோற்றுப் பருக்கைகளை

அள்ளிக்கொண்டிருக்கிறாள்

அம்முக்குட்டியின் அம்மா...

சோற்றிலிருந்து பிரிந்து

மீண்டும் தரையை முத்தமிடுகின்றன

அம்முக்குட்டியின் திரவ முத்தங்கள்.

- திருவெங்கட்

சூடு

இதோ ஒரு தேநீர்ப் பையின் உதவி

கொண்டு

பீங்கான் கோப்பையின்

சுடுநீரையோ அன்றி

தேநீர்ப் பையையோ சுவையூட்ட

முயற்சி செய்கிறீர்கள்

பையை நீங்கள் பருக

முடியாதாகையால்

நீங்கள் சுடுநீரையே

சுவையூட்ட முயல்வதாக ஒரு

முடிவுக்கு வரலாம்.

- தேவசீமா

சொல்

ஓர் அழகான பூ

ஓர் ஆள்துளை கத்தி

நீ கையிலெடுப்பதைப்

பொறுத்துதான்

மௌனம்!

- விஜி

அடுக்ககத்தின் கார் சகடங்களுக்கு

தன் முதற்குட்டியைப் பறிகொடுத்த

நாயொன்று

நேற்று பெய்த

பெருமழையில்

அதே காருக்கு அடியில் தஞ்சமடைகிறது

இரண்டாம் குட்டியுடன்,

எஞ்சியிருக்கும் மானுடத்திடம்

சற்றே காருண்யத்தை எதிர்பார்த்து...

நீட்டப்பட்ட துடைப்பத்துடன்,

அண்டிய சிறுகுடும்பத்தை

விரட்ட எத்தனிக்கிறது

மாடிவீட்டுக் கையொன்று...

மொழி புரியா நோக்கு கொண்டு

நீர்த்திவலை விழிகளுடன்

அமர்ந்திருந்தார் முதிய காவலாளி

வடகிழக்கிலிருந்து

புலம்பெயர்க்கப்பட்டதை

எண்ணிக்கொள்கிறாரோ என்னவோ...

- அனலோன்

திரவ முத்தங்கள்

பள்ளிக்குச் செல்லுமுன்

வீடெல்லாம்

சிந்திவிட்டுப்போயிருக்கும்

சோற்றுப் பருக்கைகளை

அள்ளிக்கொண்டிருக்கிறாள்

அம்முக்குட்டியின் அம்மா...

சோற்றிலிருந்து பிரிந்து

மீண்டும் தரையை முத்தமிடுகின்றன

அம்முக்குட்டியின் திரவ முத்தங்கள்.

- திருவெங்கட்

சூடு

இதோ ஒரு தேநீர்ப் பையின் உதவி

கொண்டு

பீங்கான் கோப்பையின்

சுடுநீரையோ அன்றி

தேநீர்ப் பையையோ சுவையூட்ட

முயற்சி செய்கிறீர்கள்

பையை நீங்கள் பருக

முடியாதாகையால்

நீங்கள் சுடுநீரையே

சுவையூட்ட முயல்வதாக ஒரு

முடிவுக்கு வரலாம்.

- தேவசீமா

சொல்

ஓர் அழகான பூ

ஓர் ஆள்துளை கத்தி

நீ கையிலெடுப்பதைப்

பொறுத்துதான்

மௌனம்!

- விஜி