ஜென் துறவியும், சீகல் பறவைகளும்!

ஒரு ஜென் துறவி, கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்யும் வழக்கம் கொண்டவர். அவர் தியானம் செய்யும்போது சீகல் பறவைகள் அவர்மீது அமர்ந்து விளையாடுவது வழக்கம்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், ‘‘உங்கள் மீது வந்தமரும் சீகல் பறவைகளில் ஒன்றை என்னோடு விளையாட பிடித்துத் தாருங்கள்!’’ என்று அந்தத் துறவியிடம் வேண்டுகோள் வைத்தான். அந்தச் சிறுவனின் துறுதுறுப்பால் கவரப்பட்ட அந்த ஜென் துறவியும், மறுநாள் பிடித்துத்தருவதாக அவனுக்கு உறுதியளித்தார். என்ன ஆச்சர்யம்... மறுநாள் துறவி தியானம் செய்யும்போது ஒரு சீகல் பறவைகூட அவர் பக்கம் வரவில்லை!

துறவியால் சீகல் பறவைகளுக்கு எந்த ஆபத்தும் வராது என்ற நிலை இருந்தவரை அவர்மீது சுதந்திரமாக வந்து அமர்ந்தன. ‘அவற்றில் ஒன்றைப் பிடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் தனக்கு வந்த உடனேயே தன்மீது வந்து அமராததைப் புரிந்துகொண்டார் துறவி. அதை அந்தச் சிறுவனுக்கும் விளக்கினார்.

நல்லதோ, கெட்டதோ... எண்ண அலைகளுக்கு என்றுமே ஒரு வலிமை உண்டு.

- கல்யாணி பாலு, திருநெல்வேலி-11

அனுபவமே சிறந்த பாடம்!

அது ஒரு கிராமப்புறப் பள்ளிக்கூடம். ஒரு நாள் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை, பாடத்தை மாணவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதைச் சோதிக்கும் வகையில் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.

‘‘ஒரு பட்டியில் பன்னிரண்டு செம்மறி ஆடுகள் அடைக்கப் பட்டிருந்தன. அவற்றில் எட்டு செம்மறி ஆடுகள் வேலியைத் தாண்டி வேகமாக ஓடிவிட்டன. இப்போது அந்தப் பட்டியில் எத்தனை ஆடுகள் இருக்கும்?’’ என்று கேட்டார்.

எல்லா மாணவர்களும், ‘‘நான்கு ஆடுகள் இருக்கும்’’ என்றார்கள்.

‘‘சபாஷ்’’ என்று ஆசிரியை பாராட்டி முடித்தபோது, ஒரு மாணவன் எழுந்து, ‘‘டீச்சர், இப்போது பட்டியில் ஒரு செம்மறி ஆடுகூட இருக்காது’’ என்றான். அவன் விவசாயக் குடும்பத்தில் பிறந்த மாணவன்.

அவன் பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஆசிரியை, ‘‘பன்னிரண்டில் எட்டு செம்மறி ஆடுகள் ஓடிப்போனால், மீதி நான்கு ஆடுகள்தானேப்பா இருக்கும்?’’ என்று கேட்டார்.

‘‘இல்லை டீச்சர்... செம்மறி ஆடுகளின் குணம் என்ன என்று எனக்குத் தெரியும். ஒரு செம்மறி ஆடு எப்படி முதலில் வேலியைத் தாண்டியதோ, அதேபோல் அது சென்ற வழியில்தான் மற்ற ஆடுகளும் செல்லும் குணம் உடையவை. எனவே, ஆடுகள் மொத்தமும் வேலியைத் தாண்டி ஓடி இருக்கும். இது நேரில் கண்ட அனுபவம். கணக்கின்படி விடை சரியாக இருந்தாலும் ஆடுகளின் சுபாவம் எனக்குத் தெரியும்’’ என்றான் நிதானமாக.

உண்மைதான்... அறிவியலின்படி விடை சரியாகத் தெரிந்தாலும் அனுபவமே சிறந்த பாடத்தை போதிக்கும்!

- பரிமளரங்கன், திருச்சி-2