Published:Updated:

கிண்டில் இ-ரீடர் புரட்சி... இலக்கியத்துக்குச் சாதகமா, பாதகமா?

இணையம்
இணையம்

மின்னூல்கள் கொண்டுவந்த இன்னொரு முக்கிய மாற்றம், சுயபதிப்புப் புத்தகங்களை அதிகரித்தது. பிரின்ட் போட வேண்டியதில்லை என்பதால், எழுத்தாளர்கள் எல்லோருமே பதிப்பாளர்களாக எளிதில் அவதாரமெடுக்கும் வாய்ப்பு உருவானது.

இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் வரவால் நிகழ்ந்த மாற்றங்கள் வாசிப்பில் மட்டுமல்ல... அது சார்ந்த அனைத்துத் துறைகளிலுமே நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. குறிப்பாகப் புத்தகங்களை எடுத்துக்கொண்டால், இதற்கு முந்தைய தசாப்தத்திலேயே மின் நூல்கள் வெளியாகத் தொடங்கி விட்டன. அப்போதே இதற்கான பிரத்யேக சாதனங்களும் வரத் தொடங்கின. அவற்றுள் முக்கியானது, அமேசானின் கிண்டில் இ-ரீடர்.

அனைத்துப் பயன்பாடுகளுக்குமான ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களால் ஒரு நிஜப் புத்தகத்தை வாசிக்கும் உணர்வை ஒருபோதும் தர முடியாது. எனவே, அதற்கு ஈடான அனுபவத்தைத் தரும் ஒரு சாதனமாக இது இருக்கவேண்டும் என அமேசான் நிறுவனம் கிண்டிலை வடிவமைத்தது. 2007-ல் அறிமுகமானது தொடங்கி இந்த வரிசையில் வந்த கிண்டில் சாதனங்கள் ஒவ்வொரு வருடமும் மேம்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. இந்தச் சாதனங்களில் புத்தகங்கள் படிக்க கிண்டில் ஆன்லைன் மின்னூல் ஸ்டோரும் இருக்கிறது. இதில் உங்களால் பணம் கொடுத்து புத்தகங்களைப் பதிவிறக்க முடியும்.

இந்த மின்னூல்களின் வெற்றி எதுவென்றால், எங்கும் எடுத்துச் செல்லும் அந்த போர்ட்டபிலிட்டி தான். ஆயிரக்கணக்கான புத்தகங்களைக்கூட ஒரே சாதனத்துக்குள் எடுத்துச்செல்ல முடியும். சிறிய பயணங்களிலும் படிப்பது, ஓய்வு இடைவேளைகளில் தேநீர் அருந்திக் கொண்டே வாசிப்பது, ஒரு புத்தகத்தில் தேவையானதை எளிதாகக் கண்டுபிடிப்பது என இந்தச் சாதனங்கள் வாசிப்பவருக்குத் தந்த வசதிகள் ஏராளம்.

கிண்டில் இ-ரீடர் புரட்சி... இலக்கியத்துக்குச் சாதகமா, பாதகமா?

மின்னூல்கள் கொண்டுவந்த இன்னொரு முக்கிய மாற்றம், சுயபதிப்புப் புத்தகங்களை அதிகரித்தது. பிரின்ட் போட வேண்டியதில்லை என்பதால், எழுத்தாளர்கள் எல்லோருமே பதிப்பாளர்களாக எளிதில் அவதாரமெடுக்கும் வாய்ப்பு உருவானது. இது இலக்கிய மொழியின் தரத்தைக் குறைப்பதாக ஒருபுறம் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், புத்தகம் எழுதி வெளியிடுவதை அனைவருக்குமான ஒன்றாக்கியது; எழுத்தை ஜனநாயகப்படுத்தியது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Tu8xPk

இன்னொரு பக்கம், பதிப்பகங்களும் முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு என பிரின்ட் செய்ய வேண்டியதில்லை. மக்கள் வாங்கும்வரை இ-ஸ்டோரில் புத்தகங்கள் விற்றுக்கொண்டேதான் இருக்கும். 'அசுரன்' திரைப்படம் வெளியான பின், அதன் மூலக்கதை யான 'வெக்கை' நாவல் அதிகம் விற்றது அப்படித்தான். 2019-ல் கிண்டில் ஸ்டோரில் இந்திய மொழிப் புத்தகங்களில் அதிகம் விற்ற மின்னூல் 'வெக்கை'தான் என அமேசான் குறிப்பிட்டுள்ளது.

இவற்றை எல்லாம் வைத்து, மொத்தமாக பிரின்ட்டை மக்கள் ஒதுக்கிவிட்டனர் என்று சொல்லிவிட முடியாது. இன்றும் புத்தகங்களை வாங்கி வாசிப்பதையே அதிகம் விரும்புகின்றனர் மக்கள். இது, படங்களை தியேட்டரில் பார்ப்பதற்கும், ஸ்ட்ரீமிங் தளங்களில் பார்ப்பதற்கும் இருக்கும் அதே வித்தியாசம்தான். என்னதான் மக்கள் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் எனப் பார்க்கத் தொடங்கிவிட்டாலும், தங்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திரங்களின் படங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பிரமாண்ட திரைப்படங்களை திரையரங்கில் பார்க்கவே விரும்புவார்கள். அதே தான் இங்கேயும். சில படைப்புகளைப் புத்தகங்களாகப் படிக்கவே மக்கள் விரும்புகின்றனர்.

கிண்டில் இ-ரீடர் புரட்சி... இலக்கியத்துக்குச் சாதகமா, பாதகமா?

- உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரும் முதலீட்டாளருமான வாரன் பஃபெட்டிடம், 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?' என்று ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு எளிமையாக, 'தினமும் 500 பக்கங்கள் வாசியுங்கள். அந்த முதலீட்டில்தான் அறிவு வட்டிபோல தினம் தினம் பெருகிக்கொண்டே இருக்கும். எல்லோராலும் இதைச் செய்ய முடியும். ஆனால், பெரும்பாலானவர்கள் இதை நிச்சயம் செய்யமாட்டார்கள்!' என்றார். மனிதன் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவோ, ஒரு துறை சார்ந்த அறிவை மேம்படுத்திக் கொள்ளவோ, காலம் காலமாக வாசிப்பு ஒரு முக்கியக் கருவியாக இருந்துவருகிறது.

ஆனால், தினம் தினம் புதுப் புதுப் பாய்ச்சல் காணும் டெக்னாலஜி யுகத்தில், இந்த வாசிப்பு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது? - ஜூ.வி 2020 சிறப்பிதழில் ம.காசி விஸ்வநாதன் எழுதியுள்ள சிறப்புப் பார்வையை முழுமையாக வாசிக்க > அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா? https://www.vikatan.com/news/general-news/reading-changing-to-digital-from-print-media

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு