Published:Updated:

"புலனாய்வுக்காக என் உதவியை நாடியது போலீஸ்; ஆனால்..." - எழுத்தாளர் ராஜேஷ்குமார்

பரிசல் கிருஷ்ணா

ஒரு எழுத்தாளர் சின்னச்சின்ன தடயங்களை வெச்சு எப்படி குற்றவாளியை நெருங்கறதுன்னு எழுதறாரு...

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

50 பக்கமாவது எழுத வேண்டும், 50 கதைகளாவது எழுத வேண்டும், 50 நாவல்களாவது எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்போம். இவர் 50 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார். ராஜேஷ்குமார்!

1969 ஜூலையில் முதல் சிறுகதை வெளியாகி, 1500 நாவல்கள், 2000-த்துக்கும் மேல் சிறுகதைகள் என இந்த வருடத்தோடு 50 வருடங்களைத் தொடுகிறது ராஜேஷ்குமாரின் எழுத்துப்பயணம்.

"நீங்கள் படிக்கும் எழுத்தாளர்கள்?"

"கல்கி, தி.ஜா, லா.ச.ரா எல்லாரையும் படித்திருக்கிறேன். இவர்களின் பாதையில் போனால் ஜெயிப்பது கஷ்டம் என்று நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதைதான் க்ரைம் எழுத்து." https://bit.ly/2M9J2zB

"நிறைய குற்றச் சம்பவங்களை எழுதியிருக்கிறீர்கள். காவல்துறையில் இருந்து ஏதேனும் குற்றத்தைக் கண்டுபிடிக்க உங்கள் உதவியை நாடியதுண்டா?"

ஒரு எழுத்தாளர் சின்னச்சின்ன தடயங்களை வெச்சு எப்படி குற்றவாளியை நெருங்கறதுன்னு எழுதறாரு... நீங்கள்லாம் அதைப் படிச்சா உங்களுக்கு நிறைய விதங்கள்ல உதவியா இருக்கும்'

"25 வருடங்களுக்கு முன் நடந்தது இது. காவல்துறையில் பணிபுரிந்துவந்த ஓர் ஆய்வாளர் என் வாசகர். செல்போன்கள் இல்லாத காலம். ஒரு குற்றம் தொடர்பான பெரிய காகிதக்கட்டு ஒன்றை எனக்கு அனுப்பிவைத்து டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். 'ஒரு இரட்டைக் கொலையில சில பேர் மேல சந்தேகம் இருக்கு. உங்களுக்கு அனுப்பியிருக்கற கட்டுல தடய அறிவியல் அறிக்கை, Scene of Crime, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்று எல்லாம் இருக்கு. நாங்க சந்தேகப்படற நபர்களின் வாக்குமூலமும் இருக்கு. எல்லாத்தையும் படிச்சு, யாரா இருக்கும்னு உங்க யூகத்தை நீங்க சொல்லணும்'னு கேட்டுக்கிட்டார்.

நான் சொன்னேன்: 'நீங்க என் வாசகரா இருக்கிறது எனக்கு மகிழ்ச்சி. ஆனா என் கதைகள்ல குற்றவாளி யார்னு நான் தீர்மானிச்சுட்டுதான் எழுதுவேன். அதை ஒட்டித்தான் கதையே போகும். படிக்கிற உங்களுக்குத்தான் கடைசியா குற்றவாளி யார்னு தெரியவரும். நிஜத்தோட அதை ஒப்பிட்டுப் பார்க்கிறது சரியா இருக்காது. இதை நான் பண்ணவும் கூடாது' என்று சொல்லி, திருப்பி அனுப்பிவிட்டேன்.

"புலனாய்வுக்காக என் உதவியை நாடியது போலீஸ்; ஆனால்..." - எழுத்தாளர் ராஜேஷ்குமார்

இன்னொரு சம்பவம். ஒரு காவல்துறை உயரதிகாரிகள் மீட்டிங்கில் '110 க்ரைம் நடந்திருக்கு. ஆனா பத்துதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. மத்ததெல்லாம் கிடப்புல போட்டுட்டீங்க. ராஜேஷ்குமார் நாவல்கள் படிங்க. ஒரு எழுத்தாளர் சின்னச்சின்ன தடயங்களை வெச்சு எப்படி குற்றவாளியை நெருங்கறதுன்னு எழுதறாரு... நீங்கள்லாம் அதைப் படிச்சா உங்களுக்கு நிறைய விதங்கள்ல உதவியா இருக்கும்' என்று ஒரு பெரிய அதிகாரி பேசியிருக்கிறார். அதை இன்னொரு அதிகாரி என்னிடம் பகிர்ந்துகொண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இவையெல்லாம்தான் எனக்கு விருதுகள்!"

> முதல் சிறுகதைக்கான விதை? தொடங்கி 'ரூபலா' எனும் பெயருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இன்ட்ரஸ்டிங்கான நிஜ கேரக்டர் வரை

அனைத்தும் பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளர் ராஜேஷ்குமார். "ரூபலா... தொடர்புகொள்ளவும்! 007" https://cinema.vikatan.com/literature/crime-novelist-rajeshkumar-exclusive-interview எனும் அந்தப் பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/