Published:Updated:

நாணயம் லைப்ரரி : வேலைப் பளு, மன அழுத்தத்திலிருந்து விடுபடும் 6 வழிகள்...

நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் லைப்ரரி

தொழில் வெற்றிக்கான சூட்சுமங்கள்

தொழிலில் வெற்றி பெற முதலீட்டைவிட இயல்பறிவே (commonsense) மிக முக்கியம்.

சொந்தக்காரர்களின் துரோகத்தால் ஏழையான ஒருவன், உதவி செய்கிறேன் என்று சொன்ன செல்வந்தர் ஒருவரிடம் காசு, பணம் வேண்டாம் என்று சொல்லி இறந்துபோன சுண்டெலியைத் தானமாகப் பெற்று அதைப் பூனை வளர்ப்பவருக்கு விற்று, அந்தக் காசில் கொண்டைக்கடலையை வாங்கி சுண்டலாக்கி, அதைக் காட்டுவேலை செய்பவர்களுக்குக் கொடுத்து, அதற்குப் பதிலாக மரக்கட்டுகளை வாங்கி அதில் பாதியை வீட்டில் வைத்துக்கொண்டு மீதியை விற்று ஜீவனம் நடத்தி, பின்னர் மழைக்காலத்தில் மீதி மரத்தை அதிக விலைக்கு விற்று, அந்தப் பணத்தில் மரக்கடை தொடங்கி, மரத்தை விற்பதைவிட படகு செய்வதில் லாபம் இருக்கிறது என்பதை உணர்ந்து, நொடித்துப்போன படகு வியாபாரியை பார்ட்னராக்கிக்கொண்டு, படகுத் தொழிலில் கொடிநாட்டி பெரும் பணக்காரனாக இளவயதிலேயே ஆகி, நன்றி தெரிவிக்கும் வகையில் தங்கத்தில் சுண்டெலியை செய்து செல்வந்தருக்குப் பரிசளிக்க, அவனுடைய முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து, அவர் தன்னுடைய பெண்ணை அந்த வாலிபனுக்குத் திருமணம் செய்து தந்தார் என்ற புனைவுக் கதையைச் சொல்லும் முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது செளரப் முகர்ஜி மற்றும் அனுபம் குப்தா இணைந்து எழுதிய ‘விக்டரி புராஜெக்ட் – சிக்ஸ் ஸ்டெப்ஸ் டு பீக் பொட்டென்ஷியல்’ என்கிற புத்தகம். குருசரண்தாஸ் அறிமுக உரை எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

நாணயம் லைப்ரரி : வேலைப் பளு, மன அழுத்தத்திலிருந்து விடுபடும் 6 வழிகள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கதை அல்ல நிஜம்...

மேலே நீங்கள் படித்தது வெறும் கதைதானே என்று நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணம் தவறு என்பதற்கு ஒரு நிஜ உதாரணத்தையும் சொல்கிறார்கள் ஆசிரியர்கள். ஒரு மல்ட்டி நேஷனல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த ஆங்கிலம் தெரியாத காவ்டே எனும் துடிப்பான இரவு நேர செக்யூரிட்டி கார்டு, அதே நிறுவனத்தின் தொலைபேசி ஆபரேட்டராக (அவருக்கு ஆங்கிலம் தெரியாது; அவர் பட்டதாரி என்று பலரும் எதிர்ப்புக்குரல் தந்த போதும்) சேர்ந்து, பல்வேறு பதவி உயர்வுகளைப் பெறவும் செய்தார்.

இதற்குக் காரணம், ஒரு குழந்தையைப் போன்ற ஆர்வத்துடன், தன்னை மறந்து, (நான் செய்யும் வேலைக்கான அங்கீகாரம் எனக்குக் கிடைக்குமா என்பது பற்றியெல்லாம் கவலைப் படாமல்) வேலையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்த காவ்டேயின் மிகச் சிறந்த மனப்பான்மைதான் (Attitude).

செளரப் முகர்ஜி
செளரப் முகர்ஜி

மனப்பான்மை என்பது...

பணியாளர்களுக்குப் படிப்பு மற்றும் அறிவு சம்பந்தப்பட்ட விஷயங் களுக்கு நிறுவனங்களால் தேவையான பயிற்சியை அளிக்க முடியும். ஆனால், மனப்பான்மையை வளர்ப் பதற்கான பயிற்சிகள் ஏதும் இல்லை. புத்திசாலித்தனம் மற்றும் திறமையைவிட தனிமனித மனப் பான்மையே தலைசிறந்த நிறுவனங்கள் உருவா வதற்கான வழிவகைகளைச் செய்கிறது. ஆனால், நிறுவனங்களோ துரதிர்ஷ்ட வசமாக என்ன படித்தார்கள், எங்கே படித்தார்கள், எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறார்கள் என்ற அளவீட்டை வைத்து மட்டுமே பணியாளர்களைத் தேர்வு செய்கின்றன. அறிவு மற்றும் திறனை எப்போது வேண்டுமென்றாலும் சொல்லிக்கொடுப்பதன் மூலமும் பயிற்சி அளிப்பதின் மூலமும் வளர்த்தெடுக்கலாம். மனப்பான்மை என்பது மனிதனின் இளம் வயதிலிருந்து உருவாகும் ஒன்று. அதை மாற்றுவது மிக மிகக் கடினம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மன அழுத்தம் என்னும் கொடும் நோய்...

இன்றைக்கு வெற்றிகரமாக செயல்படும்/ செயல்படாத நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கடும் மன அழுத் தத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். தாராள மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்கிற இரண்டும் இந்தியாவில் நடைமுறைக்கு வந்து சுமார் 30 ஆண்டுக்காலம் ஆகிவிட்டது. இந்த 30 ஆண்டுக்காலத்தில் நம் வாழ்க்கை பாரதூரமாக மாறிவிட்டது. இந்தியாவைப் போன்ற பலவீனமான உள்கட்டமைப்பு கொண்ட நாட்ட்டினால் இந்த அதிவேக மாற்றத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கடும் அழுத்தம் உருவாகி, திக்குமுக்காடச் செய்கிறது.

நாணயம் லைப்ரரி : வேலைப் பளு, மன அழுத்தத்திலிருந்து விடுபடும் 6 வழிகள்...

நமக்கு எல்லாம் தெரியுமா?

இதற்குக் காரணம், நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவர் களாகவே நாம் இருக்கிறோம். மேலும், நம்முடைய மூளை மற்றும் உடலின் பலம் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணம் அவற்றின் நிஜமான பலத்தைவிட மிக அதிகமானதாக இருக்கிறது. உதாரணமாக, நம்மால் மல்ட்டி-டாஸ்க்கிங் (பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்தல்) என்பதைச் சிறப்பாகச் செய்யவே முடியாது என்கின்றன ஆய்வு முடிவுகள். மேலும், நாம் செய்த தவறுகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்பதும் இல்லை. இதுவே மன அழுத்தம் அதிகமாக உருவாகக் காரணமாக இருக்கிறது.

மன அழுத்தத்தைத் தவிர்க்க 6 வழிகள்...

இந்த வித மனஅழுத்தத்தைத் தவிர்க்க ஆறு வழிகளைச் சொல்கிறார்கள் ஆசிரியர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1. எளிமையான புரியும்படியான ஸ்ட்ராட்டஜிகள் சுலபத்தில் நடை முறைப் படுத்தக்கூடியவை யாகவும், சுலபமாக விற்க முடிந்தவை யாகவும், அதில் உருவாகும் பிரச்னைகளை சுலபத்தில் சரி செய்யக்கூடிய அளவில் இருப்பவையாகவும் இருக்கும். நிறுவனமோ, தனிநபரோ எளிமை என்பது பழக்கமாகவே ஆக்கிக்கொள்ளப்பட வேண்டும்.

நாணயம் லைப்ரரி : வேலைப் பளு, மன அழுத்தத்திலிருந்து விடுபடும் 6 வழிகள்...

2. 1980-களில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏதோ ஒரு வீட்டில் இருந்த தொலைக்காட்சியில் ஒரே ஒரு படத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். இன்று வீட்டுக்கு இரண்டு டிவிகளும் அதில் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் காட்டப்படுகின்றன. ஆனால், அதைப் பார்க்கும் யாருக்கும் மகிழ்ச்சி என்பது இல்லவே இல்லை. அதே போல்தான் செய்யும் தொழிலிலும். பல வகையான நிபுணத்துவம் இன்றைக்குக் கிடைத்தாலும் பிரச்னைகள் எண்ணிக்கை குறையவே இல்லை. நிபுணத்துவத்தை எப்படிப் பெறுவது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

3. நம்முடைய ஆன்மிக மனதிற்கும் வெளியுலக விருப்பு /வெறுப்பிற்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தி யாசத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், நாம் செய்யும் செயல்களில் உள்ள குழப்பத்தைப் பெருமளவில் நீக்க முடியும்.

4. பணியிட வேலைப்பழு என்பது நம்முடைய மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதுவே குழப்பம் அதிகரிக்க முக்கியமான காரணம். இதை விலக்கினாலே நம்மால் குழப்பத்தில் இருந்து விடுதலை பெற முடியும். இதற்கு எளிமையான நடைமுறையைக் கொண்ட பணியிடச் சூழல் மிக மிக அவசியம்.

5. நாம் இரண்டு விதமான மனிதர்களைப் பார்க்கிறோம். இருக்கிற சிஸ்டத்தில் சிறப்பான செயல்களைச் செய்ய முயல்பவர்கள் ஒரு ரகம். இருக்கிற சிஸ்டத்தையே மாற்றி சிறந்த நிலையை அடைய முனைபவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரக செயல்பாட்டை நடைமுறைப்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாக இருப்பினும், அதில் வெற்றி பெற்றால், அவருக்குப் பெயரும் புகழும், பணமும் ஒருங்கே வந்துசேரும். இதற்குப் படைப்பாற்றல் மற்றும் ஞாபகத்திறனை அதிகரித்துக்கொள்ளும் திறன் இருக்க வேண்டும்.

6. இணைந்து செயல்படுதவது வெற்றிக்கு மிகவும் அவசியம். ஒரு நிறுவனம் பெரிதாகப் பெரிதாக அதன் தலைவர் எப்படிப் பல்வேறு விதமான குணாதிசியம் கொண்ட நபர்களை ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்கிறார் என்பதிலேயே அந்த நிறுவனம் பெறுகிற வெற்றி என்பது இருக்கிறது.

மன அழுத்தங்களைத் தவிர்ப்பது எப்படி என்பற்கான வழிமுறைகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்கலாம்.

- நாணயம் டீம்