Published:Updated:

எது காந்தியின் இந்தியா?

 Gandhi
பிரீமியம் ஸ்டோரி
Gandhi

இரண்டு நிகழ்வுகள். இரண்டுமே செப்டம்பர் இருபதாம் தேதி நடந்தவை.

எது காந்தியின் இந்தியா?

இரண்டு நிகழ்வுகள். இரண்டுமே செப்டம்பர் இருபதாம் தேதி நடந்தவை.

Published:Updated:
 Gandhi
பிரீமியம் ஸ்டோரி
Gandhi

ன்று, டெல்லியில் இருக்கும் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டா டலாம் என்பது குறித்து, ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார் அமித்ஷா. அதே நேரத்தில், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ‘இந்த தேசத்தின் ஒருபகுதி மக்கள், இந்த அரசால் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது காந்தியின் இந்தியாவா, இல்லை கோட்சேவின் இந்தியாவா?’ என்று கண்ணீர் வழிய பேசிக்கொண்டிருந்தார், மெஹ்பூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி. இரவு நிகழ்ச்சி முடிந்ததும், மேடையிலிருந்து இறங்கி வீட்டுக்குச் சென்றுவிட்டார் இல்திஜா. ஆனால், அவர் எழுப்பிய கேள்வி, அதே இடத்தில் அப்படியே உறைந்து நிற்கிறது... ‘இது கோட்சேவின் இந்தியாவா, காந்தியின் இந்தியாவா?’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காந்தியின் 150வது பிறந்தநாள் நிறைவுவிழாக் கொண்டாட்டங்கள் முடிந்திருக்கும் சூழலில் நாமும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விதான் இது. அதற்குமுன்னால் நாம் அறியவேண்டியது, காந்தி காண விரும்பிய இந்தியா எது என்று.

எது காந்தியின் இந்தியா?

இந்திய தேசத்தின் விடுதலைக்காகப் போராடியதைவிட, மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கவே, காந்தி அதிகம் போராடினார். ‘ராம ராஜ்ஜியம்’ என்று சொன்னவர் அவர்தான். ஆனால், அவரது ராமன் அயோத்தியின் ராமன் அல்ல. அவரைப் பொறுத்தவரை, ராமன் என்பவன் ஒரு லட்சிய மனிதன் மட்டுமே. சத்தியத்தின் பெயரால் அமைகிற ராஜ்ஜியத்தையே அவர் ’ராமராஜ்ஜியம்’ என்று வரையறுத்தார். ஆகவே, ‘ரகுபதி ராகவ ராஜாராம்...’ என்ற வரியில் இல்லை காந்தியின் தத்துவம். அதற்கு அடுத்து வரும், ‘ஈஸ்வர் அல்லா தேரோ நாம்...’ என்ற வரியிலேயே இருக்கிறது, அவரது தத்துவம். ‘காந்தியின் ராமனை, அல்லா என்றும் அழைக்கலாம் ஜீசஸ் என்றும் அழைக்கலாம்’ என்று எழுதியவர் வேறு யாருமல்ல, ராமச்சந்திர குஹா! அவரை விடவா காந்தியை அறிந்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்?!

1923-ல், இந்துத்துவ அரசியல் முன்னோடியான சாவர்க்கரின் ‘இந்துத்துவத்தின் கூறுகள் (Essentials Of Hindutva)’ எழுத்துப்பிரதி வெளிவந்தது. பின்னர், 1928-ம் ஆண்டு `இந்துத்துவா: யார் இந்து?’ ( Hindutva : Who is A Hindu?) என்ற பெயரில், புத்தகமாகவும் அச்சிடப்பட்டது, அந்தப் பிரதியில் ’எவரெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையோ, அவர்கள் இந்தியர்களும் அல்ல’ என்று அறிவிக்கிறார்.

1937-ம் ஆண்டின் முற்பகுதியில், அகமதாபாத்தில் நடந்த இந்து மகாசபா கூட்டத்தில் பேசிய சாவர்க்கர், ‘இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று இந்துக்களுடையது, இன்னொன்று முஸ்லீம்களுடையது’ என்று, பிரகடனம் செய்தார். அந்தப் பிரகடனமே இந்துமகாசபாவின் தீர்மானமாக மாறியது.

1939-ல் லாகூர் மாநாட்டில்தான் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் கோரி தீர்மானம் நிறைவேற்றுகிறது. ஆனால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து பிரிந்து போகச் சொல்லித் தீர்மானம் நிறைவேற்றியது இந்துமகாசபா.

ஒருபக்கம், ‘இஸ்லாமிய பாகிஸ்தான்’ கேட்ட ஜின்னாக்கள், இன்னொரு பக்கம், ‘இந்து ராஷ்டிரம்’ விரும்பிய சாவர்க்கர்கள்.இருதரப்புக்கும் இடையே நின்று, ‘இந்நாடு இங்கிருக்கும் எல்லோருக்கும் சொந்தம்’ என்று முழுங்கினார் காந்தி. மதத்தை வைத்து அல்ல, மக்களை வைத்து தேசியத்தைக் கட்டமைத்தார் அவர்.

எது காந்தியின் இந்தியா?

ஆனால், அந்த மாமனிதரைக் கடைசிவரை நிம்மதியிழக்கச் செய்துகொண்டே இருந்தது, மதவெறி. அன்பும் மனிதமும் நிறைந்த காந்தியின் `அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive)’ தேசியத்திற்கு, பெரும் அச்சுறுத்தலாக இருந்தது மதம். 1946 தேர்தலில் முஸ்லிம் லீக் பெருவெற்றி பெற்றபிறகு, பாகிஸ்தான் உருவாவதை காந்தியால் தடுக்க முடியாமற்போனது. அடுத்துவந்த நாள்களில், அவர் கண்முன்னாலேயே அவரது தேசம் இரண்டாகப் பிளந்தது. அந்த வரலாற்றுப் பெரும்புயலில் உள்ளே புகுந்து, இந்தியாவை மதச்சார்பற்ற குடியரசாக உருவாக்குவதில் வெற்றி பெற்றார் காந்தி. அதற்கு, அவர் கொண்டிருந்த மாபெரும் மக்கள் செல்வாக்கு உதவியது. காந்தி, அதிகாரபூர்வமாக `இந்தியாவின் தேசத்தந்தை’ ஆனார்.

ஆனாலும், அடங்காத மதவன்முறைகள் அவரை அலைக்கழித்தன. 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் அடைந்து, நாடாளுமன்றக் கட்டடத்தில் மூவர்ணக்கொடி ஏறியபோது, காந்தி அங்கில்லை. நாடு முழுவதும் வெறியேறி நடந்துகொண்டிருந்த மதக்கல வரங்களைத் தடுப்பதற்காக, கால் தேய நடக்கத் தொடங்கியிருந்தார். கிட்டத்தட்ட எண்பது வயதுக் கிழம் அவர், அப்போது! ஆனாலும், இந்தியாவின் எதிர்காலம் குறித்த கவலை அவரை எழுந்து நடக்க வைத்தது.

அவர் களத்திற்கு வந்த பிறகே, கலவரங்கள் ஓயத்தொடங்கின. இருந்தாலும், வரலாற்றுக் காரணங்களே இல்லாமல், வெறும் மதவெறியால் நாடு உடைந்த வலி, காந்தியின் மனதில் அப்படியே தங்கிவிட்டிருந்தது. நிறைய இடங்களில், அவர் தளர்ந்து அமர்கிறார். `பாபுவிடம் பழைய வலிமை இல்லை’ என்று, அருகிருக்கும் சீடர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். காந்தி அதைக் கேட்டபடி, மௌனமாகத் தலையசைக்கிறார்.

ஆம், மதவெறி இந்த தேசத்தை இரண்டாக உடைத்தபோதே, காந்தி ஆன்மாவை இழந்து விட்டிருந்தார். `ஆன்மா இல்லாத வெற்று உடலைத்தான் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தான் கோட்சே’ என்று சொல்வார்கள் சில வரலாற்றாய்வாளர்கள்.

எது காந்தியின் இந்தியா?

ஒரு நேர்காணலில் `காந்தியின் இறப்புக்குப் பிறகு, சுமார் 25 ஆண்டுகள் இந்தியா மதவன்முறைகள் இல்லாமல் அமைதியாக இருந்தது. அவர் உயிர்த்தியாகம் நமக்கு அளித்த கொடை அது’ என்று சொன்னார், ராமச்சந்திர குஹா.

காந்தி இந்தியா சுதந்திரம் அடைவதற்காக உயிர் துறக்கவில்லை; மதவெறியர்களிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் உயிர் துறந்தார். அந்த மதச்சார்பற்ற இந்தியாதான் ‘காந்தியின் இந்தியா’வாக இருக்கமுடியும்.