Published:Updated:

தலித் இலக்கியங்களின் முன்னோடி எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் மறைந்தார்!

விழி.பா.இதயவேந்தன்

புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தை தொடங்கி தனது இறுதி மூச்சு வரையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டவர் விழி.பா.இதயவேந்தன். விழுப்புரம் நெம்புகோல் இயக்கத்திலும் தீவிரமாகத் தன்னை உட்படுத்திக் கொண்டவர்.

தலித் இலக்கியங்களின் முன்னோடி எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் மறைந்தார்!

புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தை தொடங்கி தனது இறுதி மூச்சு வரையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டவர் விழி.பா.இதயவேந்தன். விழுப்புரம் நெம்புகோல் இயக்கத்திலும் தீவிரமாகத் தன்னை உட்படுத்திக் கொண்டவர்.

Published:Updated:
விழி.பா.இதயவேந்தன்
தமிழ் இலக்கிய உலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்டோர் எழுத்துக்கள் மற்றும் அரசியலில் இயங்கி வந்த எழுத்தாளரும், கவிஞருமான விழி.பா.இதய வேந்தன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

அரசியல், சிறுகதை, கட்டுரை, கவிதை, குறு நாவல், வீதி நாடகம் எனப் பன்முகத்தன்மை கொண்டவரான இதயவேந்தனின் இயற்பெயர் பா.அண்ணாதுரை. நக்சல்பாரி இயக்க அரசியலால் ஈர்க்கப்பட்டுப் பொதுவாழ்விற்கு வந்தவர், தமிழ் இலக்கியத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலித் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். பேராசிரியர் கல்யாணி அவர்களுடன் இணைந்து, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தைத் தொடங்கி தனது இறுதி மூச்சு வரையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செயல்பட்டவர். விழுப்புரம் நெம்புகோல் இயக்கத்திலும் தீவிரமாகத் தன்னை உட்படுத்திக் கொண்டவர்.

நந்தனார் தெரு
நந்தனார் தெரு

விழி.பா.இதயவேந்தன் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நந்தனார் தெரு, வதைபடும் வாழ்வு, தாய்மண், சிதேகிதன், உயிரிழை, அம்மாவின் நிழல், இருள் தீ, சகடை ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், ஏஞ்சலின் மூன்று நண்பர்கள் என்ற குறுநாவல், தலித் அழகியல், தலித் கலை, இலக்கியம் என்ற கட்டுரைத் தொகுப்புகள், கனவுகள் விரியும் கவிதைத் தொகுப்பு, வீதி நாடகத்தில் பங்கேற்பு எனத் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்தவர்.

விழி.பா.இதயவேந்தனுக்கு இதய அஞ்சலி!