Published:Updated:

காதுகளின் குரல்கள் இவை!

எம்.வி.வெங்கட்ராம்
பிரீமியம் ஸ்டோரி
எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராம் ஐயா சௌகர்யமா வளர்க்கப்பட்டவர். அவருக்கு இயல்பாகவே எதன்மீதும் கசப்பில்லை.

காதுகளின் குரல்கள் இவை!

எம்.வி.வெங்கட்ராம் ஐயா சௌகர்யமா வளர்க்கப்பட்டவர். அவருக்கு இயல்பாகவே எதன்மீதும் கசப்பில்லை.

Published:Updated:
எம்.வி.வெங்கட்ராம்
பிரீமியம் ஸ்டோரி
எம்.வி.வெங்கட்ராம்

எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமின் நூற்றாண்டு இது. அவருக்குச் சிறப்பு செய்ய காலச்சுவடு பதிப்பகம் அவரது மொத்தச் சிறுகதை களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. தன் எழுத்தில் அறத்தையும் கருணையையும் கலந்து, எல்லாவற்றுள்ளும், எல்லோருள்ளும் தன்னைக் கண்ட பேருள்ளத்திற்குக் கிடைத்த வரவேற்பு இது. இதற்கு பிரதான காரணமாக இருந்து செயல்பட்டிருக்கிறார் கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவி சுப்பிரமணியன். அவரின் உரையாடல் வழி எம்.வி.வெங்கட்ராமை அறிந்துகொள்வது அழகு.

காதுகளின் குரல்கள் இவை!

“எம்.வி.வெங்கட்ராம் ஐயா சௌகர்யமா வளர்க்கப்பட்டவர். அவருக்கு இயல்பாகவே எதன்மீதும் கசப்பில்லை. தன் படிப்பு, அறிவு, பார்வை உயர்வானதுன்னு அவருக்குப் பெரிய நம்பிக்கையுண்டு. அருமையான மனிதர், அருமையான எழுத்தாளராகவும் வாய்த்தது பெரிய விஷயம். மக்சீம் கார்க்கி ‘ரைட்டர் ஒரு இன்ஜினீயர் மாதிரி, அவன் ஆத்மாவிற்குள் போய் வேலை செய்யணும்’னு சொல்வார். அவரும் அப்படித்தான் எழுதினார்.

அவர் கைவிரல்களில் ஆட்டம் கண்டு எழுதியதை நிறுத்திய பிறகுதான் அவரை நான் சந்தித்துப் பழக ஆரம்பிச்சேன். ‘நான் பெறாத பிள்ளை’ன்னு என்னைச் சொல்வார். அப்படி ஒரு இடம் கிடைச்சது என் பாக்கியம்தான்னு சொல்லணும். அவரும் கரிச்சான் குஞ்சுவும் காபி குடிச்சுட்டு இலக்கியம் பேசிட்டு இருப்பாங்க. புதுசா எழுதப் பழகினவங்க எல்லாம் அவங்க கிட்டே படிக்கக் கொடுத்துக் கருத்து கேட்க ஆசைப்படுவாங்க. எழுத்தாளர்னு தலைவீங்கிப் போய் நிற்கிற மனோபாவமே அவர்கிட்டே இல்லை. எந்நேரமும் மலர்ச்சியுடன் காணப்படுவார்.

காதுகளின் குரல்கள் இவை!

இலக்கியப்பித்து காரணமாக தொழிலில் கவனம் இழந்தார். வியாபாரம் குறைந்து, மனநிம்மதி இழந்து வறுமையின் பிடியிலும் சிக்கினார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதினார். அவரது கதை மாந்தர்கள் சாதாரணமானவர்கள்; நம்மைப் போல் நாம் அடிக்கடி சந்திக்கும் மனிதர்களைப்போல் குறைபாடு உடையவர்கள், தவறு செய்கிறவர்கள். நடுத்தர வர்க்கத்தின் பிரச்னைகள் கேலியும் கிண்டலுமாகச் சொல்லப் படுவதற்குப் பின்னால், தீராத துக்கம் இருக்கிறது. வாழ்வின் அடிப்படை களையும், மனநுட்பங் களையும் சித்திரிக்கும் எம்.வி.வி. அதில் வெற்றி பெறுகிறார். நம்மைப் பற்றிய கசப்பான உண்மைகளை நாம் உணர்ந்தாலும், வெளியே தெரியாமல் மூடி மறைப்போம். அவர் அவற்றை சிறுகதைகளில் சொல்லிவிடுகிறார். சில கதைகளில் குடும்பம், உறவு, நட்பு இவற்றின் முகமூடிகள் கிழிபடுகின்றன.

அவர் நிறைய எழுதியிருந்தாலும் அவரது சிறுகதைகள் ஒரு தொகுப்பாக வடிவமெடுக்க முடியவில்லை. ‘வேள்வித்தீ’, ‘நித்திய கன்னி’ ஆங்காங்கே தேடிக் கிடைத்தது. அவரது ‘காதுகள்’ நாவலை கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம் என் முயற்சியால் வெளியிட்டது.

ரவி சுப்பிரமணியன்
ரவி சுப்பிரமணியன்

குடும்பத்தை நேசித்த அளவுக்கு இலக்கியத்தையும் பக்கத்தில் வைத்துப் பார்த்தார். எழுத்தாளனின் படைப்பு மேன்மைக்கு ஒரு பருவம் இருக்கிறது. அந்தக் காலத்தில்கூட அவரின் படைப்புக்கள் புத்தகமாக அவர் கையில் இல்லாமல் இருந்தது. எம்.வி.வி நூற்றாண்டை முன்னிட்டு அவரின் எல்லாச் சிறுகதைகளையும் ஒன்றுதிரட்ட விரும்பினேன். வெளியில் அவர் கதைகளைத் தேடும்போது நண்பர்களே அவர்கள் சேமிப்பிலிருந்து எடுத்துத் தந்தார்கள். புதுக்கோட்டை ஞானாலயா, விஜயா பதிப்பகம் வேலாயுதம் என அன்பர்கள் இதற்கு உதவினார்கள். காலச்சுவடு கண்ணன் முழுத் தொகுப்பாக்கினார். பேராசிரியர் கல்யாணராமன் கதைகளைத் தொகுக்கும் பணியில் உதவினார். இந்தக் கதைகள் எல்லோருக்கும் போய்ச் சேரட்டும். படித்துவிட்டு யாராவது மேலெழும்பி வரட்டும்.’’