Published:Updated:

“நேர்மை சீக்கிரத்தில் அலுப்பூட்டிவிடும்!”

பா.திருச்செந்தாழை
பிரீமியம் ஸ்டோரி
பா.திருச்செந்தாழை

சொற்களை மதிப்புமிக்க சாதனமாகப் பார்க்கிறேன். பல சமயம் எனது எழுத்து எனக்குப் போதலை. பின் எதற்கு எழுத வேண்டும்? பகிர்ந்துகொள்ள..? தெரியவில்லை

“நேர்மை சீக்கிரத்தில் அலுப்பூட்டிவிடும்!”

சொற்களை மதிப்புமிக்க சாதனமாகப் பார்க்கிறேன். பல சமயம் எனது எழுத்து எனக்குப் போதலை. பின் எதற்கு எழுத வேண்டும்? பகிர்ந்துகொள்ள..? தெரியவில்லை

Published:Updated:
பா.திருச்செந்தாழை
பிரீமியம் ஸ்டோரி
பா.திருச்செந்தாழை

தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான எழுத்தாளர் பா.திருச்செந்தாழை. வார்த்தைகளில் வசீகரம் சேர்க்கும் எழுத்து இவரது பலம். எப்போது பலூன் வெடிக்கும் என்று ஊதிக்கொண்டிருப்பதைப் போன்ற ஆர்வம் இவரது எழுத்துகளைப் படிக்கும்போது தோன்றும். நவதானியக் கடையின் வணிகராய் உட்கார்ந்திருந்த திருச்செந்தாழையிடம் தூசி பறக்கிற மூட்டைகளுக்கு நடுவே உட்கார்ந்து பேசினேன்.

பா.திருச்செந்தாழை
பா.திருச்செந்தாழை

``வறுமையின் பிடியிலிருந்த வாழ்க்கை உங்களுடையது. கதை எழுதக்கூடிய சூழல் எப்படி வந்தது?’’

“ஆரம்பத்திலிருந்தே வேலையாளா நின்னுக்கிட்டுதான் வெளியே நடப்பதைப் பார்த்திருக்கேன். அது ஏறக்குறைய ஒரு சினிமா பார்க்கிறது மாதிரி. சாலையில் நடக்கும் காட்சிகளை நாங்க வேடிக்கைதான் பார்க்க முடியுமே தவிர அதுல பங்களிக்க முடியாது. நான் இருக்கக்கூடிய பஜாரில் நிறைய பேர் வேலை பாக்கிறாங்க. அவங்களோட சேர்ந்து நானும் மூட்டை தூக்குவேன். ஆனால் இதுமட்டுமே நான் கிடையாதுன்னு உள்ளுக்குள்ளே நினைச்சிட்டே இருப்பேன். சாக்குமூட்டையில் ஏறி உட்கார்ந்து பார்த்தால் பஜார் முழுவதும் தெரியும். இதுக்குள்ளே ஒரு சின்னத் துளி மாதிரி நீந்திக்கிட்டு இருக்கோம் போலன்னு தோணும். பொட்டலம் கட்ட எடுத்த பேப்பரைப் படிச்சதுக்கு, பருப்பைச் சிந்தினதுக்கு அடிவாங்குவது, அவமானப்படுவது எல்லாம் சாதாரணமாக நடக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு மேலே இந்த வாழ்க்கையைக் கதை மாதிரிப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்குள்ளே கிடையா கிடந்து வியாபாரத்தைக் கத்துக்கிட்டு என்னையே கவனிச்சு, என்னையே வாசிச்சுட்டு வந்திட்டேன்.”

“எழுதுறதில் உங்களுக்குள்ளே ஒரு திருப்தியோ அதிருப்தியோ ஏற்பட்டிருக்கணும் இல்லையா?”

“எழுதுவதைத் தாண்டி திருப்தி, அதிருப்திக்கு வேலையே கிடையாது. கடையில் சிப்பந்தியாக வேலை பார்க்கும்போது உடல் உழைப்பு சார்ந்துதான் மதிப்பிடுவார்கள். முதன்முதலில் 100 கிலோ எடையைத் தூக்கின அன்னிக்குத்தான் என்னை முழு மனிதனாக உணர்ந்தேன். எல்லோரும் ஒரே கதையைத்தான் அவங்க அவங்க மொழியில் சொல்லிட்டு இருக்காங்க. நாம கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லிப்பார்க்கணும். படிக்க சுவாரஸ்யமாக, துல்லியமாக இருக்கணும் என்ற சின்னக் கட்டுப் பாட்டோட எழுதிக்கிட்டு இருக்கேன். ஏன்னா எழுத்தாளருக்கும் ஆதர்ச வாசகன் தேவை. உரக்க ஒலிக்காத மகாத்மா காந்தியோட குரல்தான் மிக அதிக இந்தியர்களின் காதிற்குப் போய்ச் சேர்ந்தது. அது மாதிரி என் கதைகள் போய்ச்சேரணும்னு விரும்புறேன்.”

“உங்கள் சிறுகதைகளின் மொழி கவிதையின் அருகில் நிற்பதற்கு என்ன காரணம்?”

“சொற்களை மதிப்புமிக்க சாதனமாகப் பார்க்கிறேன். பல சமயம் எனது எழுத்து எனக்குப் போதலை. பின் எதற்கு எழுத வேண்டும்? பகிர்ந்துகொள்ள..? தெரியவில்லை. அது தப்பித்தலாகவும் இருக்கலாம். துல்லியமாக உணர்வுகளை அடுக்கும்போது நிச்சயமாக வார்த்தைகளில் ஒரு இசைத் தன்மை வரும். அவர்கள் அதில் ஏதோ ஒரு கவித்துவத்தை உணர ஆரம்பித்து விடுகிறார்கள்.”

“நேர்மை சீக்கிரத்தில் அலுப்பூட்டிவிடும்!”

“பெண்களின் உலகம் உங்களுக்கு நன்றாகக் கைவருவதற்கான காரணம்?”

“சிறுநீரகக் கோளாறுக்கு அப்பாவை இழந்தபோது எனக்குப் பத்து வயது. அம்மாவுக்கு 30 வயசு. மூன்று குழந்தைகளுடன் அம்மா திகைத்து நின்னாங்க. பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. அம்மாவோட வழிகாட்டலில் தான் எழுந்து ஓட ஆரம்பிச்சேன். இன்னும் உட்காரவே இல்லை. எங்க பஜார்ல பத்துப் படி நிலக்கடலை வாங்கி அவிச்சு குடும்பத்தைக் கரை சேர்க்கிற தைரியமான பெண்கள் இருக்காங்க. அந்தப் பெண்களின் வாழ்க்கையை, துணிச்சலை, மனநிலையைப் படைப்பில் கொண்டுவர எனக்குப் பிடிச்சிருக்கு.”

“நேர்மை சீக்கிரத்தில் அலுப்பூட்டிவிடும்!”

“உங்கள் படைப்புகளில் கசப்பும் வேதனையும் சூதாட்டம் போன்ற வியாபாரமும் அதிகம் இருக்கே?”

“எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முழு நேர்மையோடு இருக்கிற விஷயம் சீக்கிரம் அலுப்பூட்டுது. அது ஏதோ ஒரு விஷயத்தில் நாடகத்தன்மை கூடியதாக இருக்கு. எங்க வியாபாரத்தில் சூதுக்கு இணையான அறிவு வேணும். பஜார் பரபரப்பாக இருப்பதற்கும் வீடு அமைதியாக இருப்பதற்கும் காரணம் அதுதான். ஒரு கடை, எழுத்தாளனையோ நேர்மையானவனையோ அனுமதிக்காது. அது சரியான வியாபாரியை மட்டுமே விரும்பும். சரியான நபராகவோ, மனசாட்சி நிரம்பியவராகவோ, நீதியின்பால் பரிவு கொண்டவராகவோ இருந்தால் கடை உடனே உங்களை வெளியேத்திடும். இங்க இருக்கிற இடத்தில் எந்த நன்மையும் செய்ய முடியாது. ஆனால் வெளியே நடக்கிறதில் எது தப்பு, எது சரின்னு சொல்ல முடியும். வியாபாரம் லாபம் சார்ந்தது. இப்பவும் என்னைக் கீழமாசி வீதியில் பா.திருச்செந்தாழைன்னு கேட்டா ஒருத்தருக்கும் தெரியாது. இங்கே என்னை ராஜான்னுதான் கூப்பிடுறாங்க. இங்கே நான் வியாபாரியாகத்தான் இருக்கணும். ராத்திரி யோசித்துவிட்டு, கொஞ்ச நேரம் படிச்சு, எழுதிட்டு எழுத்தாளன் மாதிரித்தான் தூங்கப் போகிறேன். விடியும்போது வியாபாரியாகத்தான் எழுந்திருக்கிறேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism