Published:Updated:

திருச்சியில் அடிக்கடி நடக்கும் காவல்துறை - வழக்கறிஞர்கள் மோதல் போராட்டம்..!

சி.ய.ஆனந்தகுமார்
திருச்சியில் அடிக்கடி நடக்கும் காவல்துறை - வழக்கறிஞர்கள் மோதல் போராட்டம்..!
திருச்சியில் அடிக்கடி நடக்கும் காவல்துறை - வழக்கறிஞர்கள் மோதல் போராட்டம்..!
திருச்சியில் அடிக்கடி போலீஸுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதலால் நடக்கும் போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
திருச்சியில் அடிக்கடி நடக்கும் காவல்துறை - வழக்கறிஞர்கள் மோதல் போராட்டம்..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருச்சியில் வழக்கறிஞராக பணிபுரியும் கோபி கண்ணன், கோபி செழியன் உள்ளிட்ட இருவர் மீது, திருச்சி போலீஸார் பொய் வழக்குகள் போடப்பட்டதாகவும், தொடர்ச்சியாக திருச்சி போலீஸார் எதேச்சதிகாரப் போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பாக ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீதிமன்ற வாசலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரகுமார் மற்றும் திருச்சி உரிமையியல் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஹெல்மெட் சோதனையின்போது வழக்கறிஞர் சிவா என்பவர்மீது தாக்குதல் நடத்திய போலீஸாரைக் கண்டித்து, திருச்சி வழக்கறிஞர்கள் பைக் பேரணி நடத்தியதுடன் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
திருச்சியில் போலீஸாருக்கும் வழக்கறிஞருக்குமான போராட்டத்தினால், அடிக்கடி பரபரப்பு ஏற்படுகிறது. இதை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் சரிசெய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துவருகின்றன