Published:Updated:

சிறுநீரகத்தைத் திருடிவிட்டார்கள்..! மாவட்ட ஆட்சியரிடம் குமுறிய கூலித் தொழிலாளி

தி.ஜெயப்பிரகாஷ்
சிறுநீரகத்தைத் திருடிவிட்டார்கள்..!  மாவட்ட ஆட்சியரிடம் குமுறிய கூலித் தொழிலாளி
சிறுநீரகத்தைத் திருடிவிட்டார்கள்..! மாவட்ட ஆட்சியரிடம் குமுறிய கூலித் தொழிலாளி

சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் சிறுநீரகத்தைத் திருடிவிட்டார்கள் என்றுகூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார் கூலித் தொழிலாளி.

சிறுநீரகத்தைத் திருடிவிட்டார்கள்..!  மாவட்ட ஆட்சியரிடம் குமுறிய கூலித் தொழிலாளி

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். கூலித் தொழிலாளியான இவர், குன்னத்தூர் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவ மையத்துக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அப்போது அந்த மருத்துவ மையத்தில் பணியாற்றிய தேவராஜ் என்ற மருத்துவர், அவரை வேறொரு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று, மயக்க ஊசியைப் போட்டு, அவரது உடலில் உள்ள ஒரு சிறுநீரகத்தைத் திருடி விட்டதாகவும் எனவே, அந்த மருத்துவர் தேவராஜை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று கூறியும் செந்தில்நாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.

மேலும், இப்படியான சூழலில் என்னால் சரியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றும் எனவே, என்னுடைய குடும்பச் சூழலைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு எனக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்துள்ளார் செந்தில்நாதன்.