Published:Updated:

கந்துவட்டி பிரச்னை...! - பெண் தற்கொலை முயற்சி

தி.ஜெயப்பிரகாஷ்
கந்துவட்டி பிரச்னை...! - பெண் தற்கொலை முயற்சி
கந்துவட்டி பிரச்னை...! - பெண் தற்கொலை முயற்சி

திருப்பூர் அருகே கந்துவட்டி காரணமாக பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கந்துவட்டி பிரச்னை...! - பெண் தற்கொலை முயற்சி

திருப்பூர் அருகே நாதம்பாளையம் என்ற பகுதியில் வசித்துவருபவர் பனியன் தொழிலாளி சேக் தாவூத். இவரது மனைவி மும்தாஜ் பேகம். இவர் கடந்த 2104-ம் ஆண்டில், அதே நாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூபாய் 3 லட்சம் தொகையைக் கந்துவட்டிக்கு கடனாக வாங்கியிருக்கிறார். அந்தத் தொகையில் ரூபாய் 2,70,000 ஏற்கெனவே திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில், சேக் தாவூத்துக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.

மேலும், தொடர் சிகிச்சை எடுத்து வந்ததால், மீதம் செலுத்த வேண்டிய கடன்தொகையை சில மாத காலங்களில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக அவகாசம் கோரியிருக்கிறார் சேக் தாவூத். ஆனால், சம்பந்தப்பட்ட நபர், சேக் தாவூத்திடம் அவரது வீட்டை எழுதித் தருமாறு வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் மன வேதனையடைந்த சேக் தாவூத்தின் மனைவி மும்தாஜ் பேகம் வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். பின்னர் அவரை உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும், பிரச்னை தொடர்பாக சேக் தாவூத் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.