Published:Updated:

விருதுநகரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு..!

செ.சல்மான் பாரிஸ்
விருதுநகரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு..!
விருதுநகரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு..!

விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகர் வந்தார். அவருடன்  மத்திய இணை அமைச்சர்  பொன்.இராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ள ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

விருதுநகரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு..!

நாடு முழுவதும் பின்தங்கிய மாவட்டங்களை இனம் கண்டு வளர்ச்சி மாவட்டமாக மாற்றும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 115 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டன. 

ஓரளவு தொழில் ஆதாரங்கள் இருந்தும், சிறப்பான தொழிலாளர்கள் இருந்தும் கால மாறுதலுக்கு ஏற்ப இந்த மாவட்டங்கள் மட்டும் பெரிய வளர்ச்சி பெறாமல் மிகவும் பின் தங்கியிருப்பதாக அறியப்பட்டுள்ள இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அனைத்து வசதியுமுள்ள மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் நடைபெறும் அதற்கான முதல் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்துகொண்டனர்.