Published:Updated:

கே.என்.நேருவுக்குச் சொந்தமான ஆலையில் அதிகாரிகள் சோதனை..!

சி.ய.ஆனந்தகுமார்
கே.என்.நேருவுக்குச் சொந்தமான ஆலையில் அதிகாரிகள் சோதனை..!
கே.என்.நேருவுக்குச் சொந்தமான ஆலையில் அதிகாரிகள் சோதனை..!
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான அரிசி ஆலையில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். 
கே.என்.நேருவுக்குச் சொந்தமான ஆலையில் அதிகாரிகள் சோதனை..!
திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்குச் சொந்தமான அதிநவீன அரிசி ஆலை பூவாளூரில், திருச்சி - அரியலூர் நெடுஞ்சாலையில் உள்ளது. நேருவின் தந்தை நாராயண ரெட்டியார் பெயரில் இயங்கிவரும் இந்த அதிநவீன அரிசி ஆலைக்குள் இன்று மாலை 5 மணியளவில் அதிரடியாக நுழைந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், ஆலையைச் சுற்றிலும் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், ஆலையை படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது என அனுமதி மறுத்தனர். 
இதேபோல் இந்த அரிசி ஆலையில் கடந்த 2012-ம் ஆண்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த ஆலை ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்தக் குற்றச்சாட்டில், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் பாய்ந்தோடும், பங்குனி வாய்க்காலை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டதால், அந்தச் சுற்றுசுவர் அப்போது இடிக்கப்பட்டது. சமீபகாலமாக கே.என்.நேரு வருமான வரித் துறையின் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்தார். தற்போது அதிகாரிகள் சோதனை நடத்துவதால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.