Published:Updated:

`முக்கொம்பு கொள்ளிடம் மேலணை முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டது!’ - திருச்சி ஆட்சியர் தகவல்

`முக்கொம்பு கொள்ளிடம் மேலணை முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டது!’ - திருச்சி ஆட்சியர் தகவல்
News
`முக்கொம்பு கொள்ளிடம் மேலணை முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டது!’ - திருச்சி ஆட்சியர் தகவல்

`முக்கொம்பு கொள்ளிடம் மேலணை முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டது!’ - திருச்சி ஆட்சியர் தகவல்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணை முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டதாக திருச்சி மாவட்ட ஆட்சியட் ராசாமணி தெரிவித்தார். 

 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வாத்தலை கிராமம் மற்றும் ஸ்ரீரங்கம் வட்டம், எளமனூர் கிராமத்திற்கும் இடையே முக்கொம்பு கொள்ளிடம் மேலணை கட்டப்பட்டுள்ளது. முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் வெள்ளத்தினால் சேதமடைந்த 9 கதவணைப் பகுதிகளை சரிசெய்ய ஆக்கப்பூர்வமான தடுப்பு பணிகளில் விவேகமாகச் செயல்பட்டு காவிரி டெல்டா பாசனத்தையும், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றியுள்ளோம் என்கிறார் திருச்சி கலெக்டர் ராசாமணி .

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கல்லணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கரிகாலச்சோழன் மன்னனால் பெரிய பாறாங்கற்களால் கட்டப்பட்டது,  இந்தக் கல்லணை கட்டுமானத்தை பின்பற்றித்தான் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகம் வந்த ராணுவப் பொறியாளர் ஆர்தர் கார்டன் எனும் பொறியாளர் கல்லணை கட்டுமானத்தின் நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியதுடன் 1836-ம் ஆண்டு திருச்சி முக்கொம்பில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே காவிரி டெல்டா பாசன விவசாயத்தைப் பாதுகாப்பதற்காக 45 மதகுகளுடன் ரூபாய் 2 இலட்சம் மதிப்பீட்டில் முக்கொம்பு அணையைக் கட்டினார். காவிரி டெல்டா பகுதியில் சோழர் காலத்தில் பெரிய அளவில் பாசன வசதிகள் உருவாக்கப்பட்டது. கால்வாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள், கிணறுகள் போன்றவை வெட்டப்பட்டன. மழைக் காலத்தில் பெய்யும் மழை நீரைச் சேமிக்க இதுபோன்ற ஏரி, குளங்கள் உருவாக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்கள் பாதுகாக்கும் வகையில் 40ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் நிலைகள் தூர்வாரவும், வரத்து வாய்க்கால்கள் தூர்வாரவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக  2017-ம் ஆண்டு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஏரி, குளங்களைத் தூர்வார உத்தரவிட்டார்.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் 58 பணிகள் ரூபாய் 4.3 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு நீர்ப் பிடிப்பு பகுதி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், களிமண், போன்ற கனிமங்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகவும், எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்த கனமழையின் காரணமாக உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து 159 கி.மீ. கடந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்குத் தண்ணீர் வருகிறது. திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தனியாகவும், கொள்ளிடம் ஆற்றின் வழியாகத் தண்ணீர் கடலுக்குச் செல்ல வசதியாகவும் முக்கொம்பு கொள்ளிடம் மேலணை கட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி  திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு கொள்ளிடம் மேலணை மற்றும் காவிரி ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.  கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி இரவு முக்கொம்பு கொள்ளிடம் மேலணை ஆற்றின் கதவணையில் தொடர்ச்சியாகக் கீழே விழுந்தன. இதனையடுத்து கொள்ளிடம் மேலணை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒருபுறம் மணல் மூட்டைகளை அடுக்கியும், உடைந்த கதவணையை சரிசெய்யும் பணியும் மற்றொரு புறம் உடைந்த இடத்தில் இருந்து பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு உடைப்பைச் சரிசெய்யும் பணி நடைபெற்றது. 

இந்தப் பணிகளைத் தமிழக முதல்வர் கடந்த 24-ம் தேதி நேரில் பார்வையிட்டார். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 22 அடி ஆழம் வரை மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரம்பலூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரிய பாறாங்கற்கள் டாரஸ் வாகனத்தின் மூலம் கொண்டுவந்து உடைப்பைச் சரிசெய்யும் பணி நடைபெற்றது. இப்பணியில் 16 பொக்லைன் இயந்திரங்களும், 3 மண் தள்ளும் இயந்திரங்களும், 16 டிராக்டர்களும், கட்டுமானப்பணியில் 600 பணியாளர்கள் ஈடுபடுப்பட்டனர்.  இப்பணியாளர்களுக்குத் தேவையான உணவு,தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூடவே தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மாநில பேரிடர் மற்றும் மீட்பு படையினரும் மீட்பு படகுகள், மருத்துவக் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வளர்மதி, திருச்சி மண்டலத்தின் தலைமைப் பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கூடுதல் தொழில்நுட்ப ஆலோசனைக்காக பெங்களுர் மேஜர் அரவிந்த் தலைமையிலான குழு முக்கொம்பிற்கு வருகை தந்து சீரமைப்பு பணியினை ஆய்வு மேற்கொண்டனர்..

தொடர் முயற்சிகள் காரணமாக  கடந்த 22.08.2018 முதல் 05.09.2018 வரை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் உடைப்பு சீரமைக்கப்பட்டது. அடுத்து நீர் கசிவு உள்ளிட்டவற்றைக் கண்காணித்து முக்கொம்பு கொள்ளிடம் மேலணை முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான தடுப்புப் பணிகளால், காவிரி டெல்டா பாசனத்தையும், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்பட்டுள்ளது” என்றார்.