Published:Updated:

`கலெக்டர் சந்திக்க மறுப்பது ஏன்?’ - மணல்குவாரி விவகாரத்தில் வெடிக்கும் முகிலன்

`கலெக்டர் சந்திக்க மறுப்பது ஏன்?’ - மணல்குவாரி விவகாரத்தில் வெடிக்கும் முகிலன்

`கலெக்டர் சந்திக்க மறுப்பது ஏன்?’ - மணல்குவாரி விவகாரத்தில் வெடிக்கும் முகிலன்

`கலெக்டர் சந்திக்க மறுப்பது ஏன்?’ - மணல்குவாரி விவகாரத்தில் வெடிக்கும் முகிலன்

`கலெக்டர் சந்திக்க மறுப்பது ஏன்?’ - மணல்குவாரி விவகாரத்தில் வெடிக்கும் முகிலன்

Published:Updated:
`கலெக்டர் சந்திக்க மறுப்பது ஏன்?’ - மணல்குவாரி விவகாரத்தில் வெடிக்கும் முகிலன்

``இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து முறைகேடாக நடக்கும் மணல் குவாரியை மூடுவது, அந்த மணல் குவாரியை ஜனநாயக ரீதியில் முற்றுகையிட்ட 14 பேரை பிணையில் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் கொடுக்க போனோம். ஆனால், அவர் எங்களைப் பார்க்காமல் அனுப்பிவிட்டார். அதன் மர்மம் என்ன?" என்று பத்திரிகையாளர்களிடம் வெடித்தார் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்.


 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணத்தட்டையில் அரசு மணல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. அதோடு, அதன் அருகே உள்ள ராஜேந்திரத்தில் மணல் கிடங்கு ஒன்றும் உள்ளது. `மணத்தட்டையில் மணல் குவாரி இயக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை போட்டிருக்கு. அதேபோல், ராஜேந்திரம் மணல் கிடங்கு இயக்க இன்னும் அனுமதி வாங்கலை. ஆனால், முதலமைச்சரின் துணையோடு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவையும் மீறி இவை இரண்டையும் அதிகாரிகள் இயக்கி வருகிறார்கள். மணல் குவாரி மற்றும் மணல் கிடங்கை இயக்க அனுமதி வழங்கக் கூடாது" என்று சில தினங்களுக்கு முன்பு முகிலன் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழனிடம் மனு கொடுத்தார். எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், நாம் தமிழர் கட்சி மற்றும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 14 பேர் கடந்த வெள்ளியன்று மணத்தட்டை மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த போலீஸார், குளித்தலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவர்களைப் போலீஸாரின் கெடுபிடியையும் மீறி முகிலன் சென்று சந்தித்தார். இதனால், மாலையில் அவர்களை விடுவிக்காமல் பிணையில் வெளிவரமுடியாத மூன்று பிரிவுகளில் 14 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த செய்த போலீஸார், அவர்களை குளித்தலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவதால், அவர்களை விடுவிக்கும்படி வலியுறுத்திய மனுவோடு இன்று கலெக்டரை பார்க்கப் போனார் முகிலன். ஆனால், ஆட்சியர் அன்பழகன் அவற்றைப் பார்க்காமல் அனுப்பிவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


 

அப்போது பேசிய முகிலன், ``சமூக அக்கறையோடு, ஜனநாயக ரீதியில் போராடியவர்களை இப்படி கைது செய்திருப்பது நீதிக்குப் புறம்பானதாகும். இந்திய அரசியலைப்புச் சட்டம் 51(ஏ) விதியின்படி சமூக சொத்தான ஆற்றைப் பாதுகாக்கப் போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அதனால், அவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி சிறையிலிருந்து விடுதலை செய்ய மாவட்ட நிர்வாக நீதிபதியான கலெக்டர் அன்பழகன் உத்தரவிட வேண்டும்ன்னு சொல்லிதான் அவரைப் பார்க்கப் போனோம். ஆனால் அவர், 'நாளை வாருங்கள்'ன்னு சொல்லிட்டு, கேம்ப் ஆபீஸுக்குள் போயிட்டார். முன்பெல்லாம் கலெக்டர் அலுவலகத்தில் தனி தாசில்தார் ஒருவர் இப்படி எமர்ஜென்ஸி மனுக்களை வாங்க இருப்பார். 'அவரைப் பார்த்தாவது மனு கொடுத்துட்டு போறோம்'ன்னு சொன்னதுக்கு காவல்துறை எங்களை மிரட்டி அனுப்பிவிட்டனர். நாளை அந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், எந்த முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்ட 14 பேரை விடுவிக்க மறுத்து மாவட்ட ஆட்சியர் ஓடி ஒளிந்ததின் மர்மம் என்ன? அவர் யாருக்கு கட்டுப்பட்டு இப்படி சட்டத்தை மீறுகிறார் என்று தெரியவில்லை. 14 பேரை உடனடியாக விடுவிக்கலன்னா, போராட்டத்தில் குதிப்போம்" என்றார் ஆக்ரோஷமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism