Published:Updated:

சந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்!

சுரேஷ் அ
சந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்!
சந்தைக்கு வந்த ஆறு அடி உயர வாழைத்தார் - ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்!

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் அடுத்த, மெட்டாலா காமதேனு மார்க்கெட்டுக்கு ஆறு அடி உயரம் கொண்ட வாழைத்தார் விற்பனைக்கு வந்ததை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டம், மெட்டாலா பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு இப்பகுதியில் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மூன்று ஏக்கர் நிலத்தில் கற்பூர வள்ளி ரக கலப்பு வாழையைப் பயிரிட்டிருந்தார். தற்போது, இவை விளைச்சலுக்கு வந்துள்ளது. இதை இன்று மெட்டாலா காமதேனு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தார். 

வாழைத்தார் 70 கிலோ எடையில் ஆறு அடி உயரத்துக்கு மெகா சைஸில் இருந்தது. ஒரு வாழைத்தாரில் 25 சீப்புகளுடன் 500 காய்கள் இருந்தன. இந்த வாழைத்தார் ரூ.800க்கு ஏலம் போனது. இந்த பிரமாண்ட வாழைத்தாரைப் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச்  சென்றனர்.