Published:Updated:

காதலன் சொன்னதைச் செய்தேன்; வாழ மறுக்கிறார்!' - கலெக்டர் ஆபீஸில் இளம்பெண் கண்ணீர்

காதலன் சொன்னதைச் செய்தேன்; வாழ மறுக்கிறார்!' - கலெக்டர் ஆபீஸில் இளம்பெண் கண்ணீர்
காதலன் சொன்னதைச் செய்தேன்; வாழ மறுக்கிறார்!' - கலெக்டர் ஆபீஸில் இளம்பெண் கண்ணீர்

காதலன் சொன்னதைச் செய்தேன்; வாழ மறுக்கிறார்!' - கலெக்டர் ஆபீஸில் இளம்பெண் கண்ணீர்

"காதலித்துத் திருமணம்செய்த காதலருடன் என்னைச் சேர்த்துவையுங்கள் என்று போலீஸாரிடம் புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்" என ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பாதிக்கப்பட்ட பெண் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயசாந்தி. இவர், எனது கணவருடன் சேர்த்து வையுங்கள் என்ற கோஷத்தோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார். போராட்டம் நடத்திய விஜயசாந்தியிடம் பேசினோம். ”அடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். தற்போது, லோகநாதன் உளுந்தூர் பேட்டையில் உள்ள பட்டாலியனில் காவலராகப் பணியாற்றிவருகிறார். முசிறி காவல் நிலையத்தில் லோகநாதன் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டுக் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்துவந்தோம். வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும்  என்று சொன்னதால், நாங்கள் இருவரும் கடந்த ஆண்டு அவிநாசியில் உள்ள எனது தோழியின் வீட்டில் ரகசியத் திருமணம் செய்துகொண்டோம்.                                    

பின்பு, துறையூரில் தனியாக வாடகைக்கு வீடு பிடித்து வாழ்ந்துவந்தோம். அப்போது,  5 மாத கர்ப்பமாக இருந்தேன். இதையறிந்த, லோகநாதன் மற்றும் அவரது பெற்றோர் கருவைக் கலைத்தால் மட்டுமே குடும்பத்துடன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, நானும் குடும்பத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக துறையூர் பாலக்கரையில் உள்ள சித்த மருத்துவரிடம் கருவை கலைத்தேன். இதன் பின்னர், வீட்டுக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தியதற்கு, லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர். 

முட்டி மோதிப் பார்த்தேன் முடியவில்லை. முடியாத்பட்சத்தில் துறையூர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தேன். அவர்கள் பெரம்பலூரில் கொடுக்கச் சொன்னார்கள். பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றபோது, முசிறி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்கமாறு அலைக்கழித்தார்கள். என்னுடன் எனது கணவரை சேர்த்துவைக்க வேண்டும். எனது கருவை கலைக்கவைத்த லோகநாதன் குடும்பத்தார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டேன். அதன் பின்பு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமியிடம் மனு கொடுத்திருக்கிறேன். அவரும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் அடுத்தகட்ட போராட்டத்துக்குத் தயாராக இருக்கிறேன்" என்று வேதனையுடன் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு