Published:Updated:

வீடு கிரகபிரவேஷத்தை வித்தியாசமாக செய்து அசத்திய கரூர் தம்பதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீடு கிரகபிரவேஷத்தை வித்தியாசமாக செய்து அசத்திய கரூர் தம்பதி!
வீடு கிரகபிரவேஷத்தை வித்தியாசமாக செய்து அசத்திய கரூர் தம்பதி!

வீடு கிரகபிரவேஷத்தை வித்தியாசமாக செய்து அசத்திய கரூர் தம்பதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவனடியார்களை வைத்து தமிழ் பாசுரங்களை பாட வைத்து தமிழ்முறைப்படி வீட்டிற்கு கிரகபிரவேஷம் செய்து அசத்தி இருக்கிறது கரூரைச் சேர்ந்த தம்பதி.


 கரூர் மாவட்டம்,மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள திருமுக்கூடலூரைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் மற்றும் அனுராதா தம்பதிகள். இவர்கள்,தங்கள் கடின உழைப்பில் கிடைத்த பணத்தைக் கொண்டு,திருமுக்கூடலூரில் வீடு ஒன்றை கட்டினார்கள். திருப்பூரில் இருந்து வரும் அமராவதி ஆறு காவிரி ஆறோடு இந்த ஊரில்தான் சங்கமிக்கிறது. அதனால்தான்,இந்த கிராமத்திற்கு திருமுக்கூடலூர் என்ற பெயர் வந்திருக்கிறது. அதனால் பாரம்பர்யமிக்க இந்த கிராமத்தை விட்டு நகர வாழ்க்கைக்கு மாற நினைக்காத இந்த தம்பதி,கிராமத்திலேயே வீட்டை கட்டி இருக்கிறார்கள். ஆனால்,வீடு கிரகபிரவேஷ விழாவை பிராமணர்களை அழைத்து வந்து சமஸ்கிருத மந்திரங்களை ஓத வைத்து நடத்தாமல்,சிவனடியார்களை அழைத்து வந்து தமிழ் பாசுரங்களை பாட வைத்து நடத்தி அசத்தி இருக்கிறார்கள். தமிழ் ஆர்வலர்களும்,தமிழ் உணர்வாளர்களும் இந்த தம்பதியை வாழ்த்தி வருகிறார்கள்.

நம்மிடம் பேசிய ஆனந்த், "எங்க ஊர் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர்கள் நிறைந்த ஊர். அதனால்,இங்கு உள்ள ஒவ்வொருவருக்கும் விரும்பியோ,விரும்பாமலோ தமிழ்மீது ஈடுபாடு வர இயல்பாகவே வழி ஏற்படுத்தப்படுகிறது. எனக்கும் அவர்கள்தான் தமிழ் உணர்வை வளர்த்தார்கள். எங்கள் பிள்ளைகளுக்கும் தமிழ் பெயர்களையே வைத்துள்ளோம். பிறரையும் வைக்க சொல்லி தூண்டுகிறோம். எங்க உழைப்பில் கிடைத்த பணத்தைக் கொண்டு இந்த வீட்டை கட்டினோம். 'இங்க ஏன் வீட்டைக் கட்டுற?. இந்த கிராமத்தில் வீட்டைக் கட்டினா சல்லி பைசா பிரயோஜனம் இல்லை. இதையே கரூர் நகரத்தில் கட்டினால்,நீங்களும் குடியிருக்கலாம்;வாடகைக்கு விட்டும் நாலு காசு பார்க்கலாம். பொழைக்க தெரியாத ஆளா இருக்கியே'ன்னு பலரும் சொன்னாங்க. நான் அதை கண்டுக்கலை. எவ்வளவு தூரம் போனாலும் என்னுடைய வேர் இந்த கிராமத்தில்தான் பரவி இருக்கு. அதனால்,இங்கேயே கட்டினேன்.

அதேபோல்,நாம கட்டின வீட்டு புதுமனை புகுவிழாவை நமக்கு புரியாத சமஸ்கிருத மந்திரங்களை படித்து ஏன் சொல்லனும். சிவனடியார்களை வைத்து தமிழ் பாசுரங்களை ஓத வைத்து நடத்தனும்னு நினைச்சேன். உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த சிவனடியார்களை வைத்து தமிழ்முறைபடி தமிழ் பாசுரங்களை பாட வைத்து வீட்டு புதுமனை புகுவிழாவை நடத்தினேன். தமிழ் உணர்வாளர்கள் பலரும் என்னை பாராட்டுறாங்க" என்றார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு