Published:Updated:

25 லட்சம் மீனவர்கள் பாதிப்பு - புதிய உள்நாட்டு கப்பல் வழித்தடத்துக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு!

சர்வதேச கப்பல் வழித்தடத்தை 40 கடல் மைல் தொலைவில் இருந்து 15 மைல் தொலைவுக்குள் மாற்றும் புதிய உள்நாட்டு கப்பல் வழித்தடம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மீனவர்கள் படகில் கறுப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினர்.

25 லட்சம் மீனவர்கள் பாதிப்பு - புதிய உள்நாட்டு கப்பல் வழித்தடத்துக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு!

கன்னியாகுமரி முதல் குஜராத் வரையிலான மேற்கு கடல் பகுதியில் கரையிலிருந்து 15 நாட்டிக்கல் மைல் முதல் 25 நாட்டிக்கல் மைல் வரை புதிய உள்நாட்டு கப்பல் வழித்தடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்ட மீனவர்கள் கடலில் கறுப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ``கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடல் பகுதியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் லட்சக்கணக்கான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

25 லட்சம் மீனவர்கள் பாதிப்பு - புதிய உள்நாட்டு கப்பல் வழித்தடத்துக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு!

குமரி மாவட்ட மீனவர்கள் பெரும்பாலும் கேரளா மாநிலத்தின் பல்வேறு துறைமுகங்களில் இருந்தும் ஆழ்கடல் மீன் பிடித்தொழிலுக்கு செல்கின்றனர். நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 கடல் மைல் தொலைவிலும் விசைப்படகு மீனவர்கள் 40 நாட்டிக்கல் தொலைவிலும் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். இந்த நிலையில், இந்திய கப்பல் போக்குவரத்து துறை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வரைபடம் மற்றும் அறிக்கையில் கன்னியாகுமரி முதல் குஜராத் மாநிலம் கச் வரை கரையிலிருந்து 15 நாட்டிக்கல் மையில் முதல் 25 நாட்டிக்கல் வரை புதிய கப்பல் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி கேரளா, கர்நாடகா குஜராத் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கும். குமரி மாவட்டத்தில் 8,000 நாட்டுப் படகுகள் 2,000 விசைப்படகு மீனவர்களை இது பாதிக்கும். 40 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் இருக்கும் சர்வதேச கப்பல் வழித்தடத்தை 15 நாட்டிக்கல் மைலுக்குள் உள்நாட்டு கப்பல் வழித்தடம் கொண்டு வருவது மீனவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பாதிப்படைவதோடு இந்த வழித்தடம் கொண்டு வரும் பட்சத்தில் 25 லட்சம் மீனவர்கள் பாதிப்படைவார்கள்" என்றார்.