Published:Updated:

 ‘பெட்ரோல் விலை குறைவு!’.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

ராம் பிரசாத்
 ‘பெட்ரோல் விலை குறைவு!’.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
 ‘பெட்ரோல் விலை குறைவு!’.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 15 நாள்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வந்தது. இந்த முறை மாற்றப்பட்டுக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை அன்றாடம் நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை, புதிய உச்சத்தை எட்டியது. அக்டோபர் மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 87.05 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 79.40 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை குறையத்தொடங்கியது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80.73 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76.59 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தை ஒப்பிடும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைந்துள்ளது.