Published:Updated:

மாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்..! - ஓ.பி.எஸ் திடீர் பல்டி

எம்.கணேஷ்
மாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்..! - ஓ.பி.எஸ் திடீர் பல்டி
மாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்..! - ஓ.பி.எஸ் திடீர் பல்டி

மாம்பழக் கூழ் தொழிற்சாலை தொடர்பாகக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக மாற்றிப் பேசியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என மாம்பழ விவசாயிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்..! - ஓ.பி.எஸ் திடீர் பல்டி

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழ விவசாயம் நடந்துவருகிறது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மா பயிர் செய்யப்படுகிறது. பெரியகுளத்தில் அரசு சார்பில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது மா விவசாயிகளின் பல ஆண்டுக் கோரிக்கை. தேனி விவசாயிகளின் கோரிக்கையை சரி செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். ஆனால், இப்போது வரை, மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைத்தபாடில்லை. இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ``மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க 50% மானியம் கொடுக்கப்படும். தனியார் நிறுவனங்கள் முன் வர வேண்டும்’’ என்றார். 

இது தொடர்பாக, பெரியகுளம் பகுதி மா விவசாயிகளிடம் பேசியபோது, ``பெரியகுளத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும் எனப் பல ஆண்டுகளாகக் காத்துக்கிடந்தோம். ஆனால், இன்று தனியாருக்குத் தாரைவார்க்கும் விதமாக, மாம்பழக் கூழ் தொழிற்சாலையைத் தனியார் நிறுவனங்கள் அமைக்கட்டும் என்று பேசியுள்ளார் துணை முதல்வர். பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைத்தால், அதுவும் அரசே அமைத்தால் எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும், தற்போது, ஓசூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் உள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலைகளுக்குத் தேனி மாவட்ட மாம்பழங்களை அனுப்புகிறோம். மாம்பழங்களை அனுப்பும் செலவு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால், விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். அரசு எங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு பெரியகுளத்தில் அரசு மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும்!’’ என்றனர்.

முன்னர் நாங்கள் தொழிற்சாலை கட்டுகிறோம் என்று கூறிவிட்டு, தற்போது 50% மானியம் தருவதாகக் கூறுவது விவசாயிகள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.