Published:Updated:

`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..!

`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..!
`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..!

வனக்குற்றங்களைத் தடுப்பதற்கும் வனப்பாதுகாப்புக்கும் என பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டபோதும்கூட, ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு வனத்துக்குள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் பார்க்கும் மக்களை வனத்துறை மிரட்டி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..!

தேனி மாவட்டம் வருசநாடு பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும். வனத்துறையினரின் நெருக்கடியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடமலை- மயிலை ஒன்றிய வன விவசாயிகள் பாதுகாப்புக் குழு சார்பில், இன்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க வருசநாடு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பி.பெருமாள் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவருமான பி.டில்லிபாபு மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..!

இதுகுறித்து நம்மிடம் பேசிய டில்லிபாபு, ``வருசநாடு வனப்பகுதியில் 3 தலைமுறையாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் இம்மக்களை, வனத்துறை மூலமாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சி நடைபெறுகிறது. இதற்கு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட 1905-ம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சட்டத்தில் யாரை வேண்டுமானாலும் வனத்திலிருந்து அப்புறப்படுத்தலாம். ஆனால், சமீபத்தில் இயற்றப்பட்ட 2013, 2015-ம் ஆண்டு சட்டப்படி, வனத்தில் வசிப்பவர்களை வெளியேற்ற முடியாது. இதனால் பழைய சட்டத்தைப் பயன்படுத்தி, வனத்துறையினர் அம்மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். வருசநாடு வனப்பகுதிகளில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் இந்த வன விவசாயிகளுக்கு, வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்க வேண்டும். வனத்துறையினர் விவசாயிகளை அச்சுறுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``பட்டா உள்ள தனியார் நிலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் அந்நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார்கள். ஆனால், பட்டா இல்லாமல் வனத்தை ஆக்கிரமித்தால் வனத்துறை அவர்களை வெளியேறத்தான் சொல்லும்!" என்றார்.