Published:Updated:

ஏழு பேர் விடுதலைக்காக புயலிலும் தொடர்ந்த சைக்கிள் பேரணி!

ஏழு பேர் விடுதலைக்காக புயலிலும் தொடர்ந்த சைக்கிள் பேரணி!
ஏழு பேர் விடுதலைக்காக புயலிலும் தொடர்ந்த சைக்கிள் பேரணி!

ஏழு பேர் விடுதலைக்காக புயலிலும் தொடர்ந்த சைக்கிள் பேரணி!

பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலைக்காக, கஜா புயலையும் பொருட்படுத்தாமல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தினர். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மாநில அரசே முடிவுசெய்துகொள்ளலாம்" என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. இதையடுத்து, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 7 பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்துவருகிறார் தமிழக ஆளுநர். இருந்தும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழகம் உட்பட, உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழக ஆளுநருக்கு பரிந்துரைக் கடிதங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சிவகங்கையில் இருந்து சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி விடுதலைக் கோப்பில் ஆளுநர் கையெழுத்திடக்கோரி ,சைக்கிள் பயணத்தைக் கடந்த 10-ம் தேதி அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணிச் செயலாளர் புலேந்திரன் முருகாநந்தம் தலைமையில் செரோன் குமார், பாலா, காளீஸ்வரன், அஜித் செல்வராஜ், கதிரவன், ஜெகதீஸ் ஆகியோர் இந்த சைக்கிள் பயணத்தில் கலந்துகொண்டு சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். 

கடந்த இரண்டு நாள்களாக கஜா புயலின் பாதிப்பின்போதும் சற்றும் நிறுத்தாமல் தொடர்ந்து சைக்கிள் பேரணியைத் தொடர்கிறார்கள். இன்று விழுப்புரத்தை அடைந்த இக்குழுவினருடன் பேசினோம். மழையில் நனைந்துகொண்டு சைக்கிள் ஓட்டுவது சிரமமாக இல்லையா எனக் கேட்டதற்கு, ``28 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதைக் காட்டிலும் இதுவொன்றும் துயரமானதல்ல’ என்றனர்.  தினசரி பல நகர கிராமங்கள் வழியாக வரும் இப்பேரணியினரிடம், மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளதாகவும் தெரிவித்தனர். இப்பேரணி இன்னும் இரு தினங்களில் சென்னை வந்தடைய உள்ளது. 
 

அடுத்த கட்டுரைக்கு