Published:Updated:

`ஐந்து நாள்களாக உறக்கம் இல்லை!' - `கஜா' பணிகளில் தீவிரம் காட்டும் ஜெய் ஆனந்த்

`ஐந்து நாள்களாக உறக்கம் இல்லை!' - `கஜா' பணிகளில் தீவிரம் காட்டும் ஜெய் ஆனந்த்
News
`ஐந்து நாள்களாக உறக்கம் இல்லை!' - `கஜா' பணிகளில் தீவிரம் காட்டும் ஜெய் ஆனந்த்

`ஐந்து நாள்களாக உறக்கம் இல்லை!' - `கஜா' பணிகளில் தீவிரம் காட்டும் ஜெய் ஆனந்த்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த். `ஐந்து நாள்களாக உறக்கம் இல்லாமல், எங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்து வருகிறோம்' என்கிறார் ஜெய் ஆனந்த். 

அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், போஸ் மக்கள் பணியகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். டெல்டாவைப் புரட்டிப் போட்ட கஜா புயலால், திவாகரனின் கல்லூரி, வீடு உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துவிட்டன.

கல்லூரி வகுப்பறைகளில் இருந்த மேஜையறைகள் நொறுங்கிப் போய்விட்டன. இருப்பினும், டெல்டா பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர், ஜெனரேட்டர் வசதி, உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார் ஜெய் ஆனந்த். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்குத் தேவையான உதவிகளை, இவரது அமைப்புதான் கடந்த சில நாள்காகச் செய்து வருகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுதொடர்பாகப் பேசும் போஸ் மக்கள் பணியகத்தின் பொறுப்பாளர்கள், ``ஐந்து நாள்களாக உறக்கம் இல்லாமல் தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறோம்.

ஐம்பதாயிரம் பேருக்கான நாப்கின்கள், தார்ப் பாய்கள், மெழுகுவத்திகள், உணவுப் பொட்டலங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. குடிநீர் கிடைப்பதுதான் மிகுந்த சிரமமாக இருக்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஜெனரேட்டர் மூலம் நீரை எடுத்து குடிநீர்த் தொட்டிகளை நிரப்பி வருகிறோம். தங்கள் கல்லூரி, வீடு பாதித்ததைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிவாரணப் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார் ஜெய் ஆனந்த்" என்கின்றனர்.