Published:Updated:

‘தண்ணீர் பங்கீடு செய்வதில் பிரச்னை’- அணைக்கட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்

‘தண்ணீர்  பங்கீடு செய்வதில் பிரச்னை’- அணைக்கட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்
‘தண்ணீர் பங்கீடு செய்வதில் பிரச்னை’- அணைக்கட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்

சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனதாரர்களுக்கு, விவசாயத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. மானாமதுரையைக் கடந்துவிட்டநிலையில், தண்ணீர்ப் பங்கீடு செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

‘தண்ணீர்  பங்கீடு செய்வதில் பிரச்னை’- அணைக்கட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, வேதியரேந்தலில் தண்ணீர்ப் பிரச்னை காரணமாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பார்த்திபனூர் மதகு அணையில் இடது பிரதான கால்வாயின் ஷட்டர்களைஅடைக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். அப்போது, ஐந்து கண்மாய்ப் பாசனதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் ஷட்டர்கள் அடைக்கப்படுவது தடுக்கப்பட்டது.விவசாயிகள் பிரச்னை சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக மாறிவிடாமல் தடுக்க, சிவகங்கை கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு விரைந்தார். இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். விவசாயிகளோடு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை . தண்ணீரைத் தேக்கிவைத்து திறந்தால்தான்  கால்வாய்களில் வேகமாகச் செல்லும். உங்களுக்கான தண்ணீர் வேறு எங்கும் போகாது என்று கூறி விவசாயிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவை தோல்வியில் முடிந்தது. பாதுகாப்பு கருதி வேதியரேந்தலில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதே வைகைத் தண்ணீர் பிரச்னைக்காக இளையான்குடி காவல்நிலையம் அருகே மேலாயூர், கீழையூர் மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரசுப் பேருந்தை கிராம விவசாயிகள் சிறைப்பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.