Published:Updated:

கஜா புயல் நிதியுதவி - சிவகங்கை ஆட்சியரின் மனம் கவர்ந்த மழலையர்கள்!

கஜா புயல் நிதியுதவி - சிவகங்கை ஆட்சியரின் மனம் கவர்ந்த மழலையர்கள்!
கஜா புயல் நிதியுதவி - சிவகங்கை ஆட்சியரின் மனம் கவர்ந்த மழலையர்கள்!

கஜா புயலுக்கு உதவும் வகையில் நிதியுதவி அளித்து மாவட்ட ஆட்சியரை நெகிழவைத்துள்ளனர் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகள்.

திங்கட்கிழமை என்றாலே சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொதுமக்களின் குறைகள் ஆங்காங்கே தொக்கி இருக்கு இடமாகவே காட்சியளிக்கும். நம்பிக்கையோடு மனுக்களை எழுதி வரும் மக்களுக்கு என்ன பதில் சொல்லுவது என்பதில்தான் எந்த மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் கவனம் இருக்கும். அப்படியொரு நேரத்தில் மழலையர்கள் ஒன்று சேர்ந்து கஜா புயலுக்கு நாங்களும் உதவிக்கரம் நீட்டுகிறோம் என்று சொல்லி தங்களது ஏரியாக்களில் வீடு வீடாக ஏறி இறங்கி அதன் மூலம் கிடைத்த ரூ.4000 பணத்தை  டிமாண்ட் ட்ராப்ட்டாக ஆட்சியரிடம் கொடுத்தபோது மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போனார் ஆட்சியர்.

இதுகுறித்து யூ.கே.ஜி படிக்கும்  மோனிகாஸ்ரீயிடம் பேசினோம். ``காமராஜர் காலனியில இருந்து வர்றேன். இங்கே வந்திருக்கிறவுங்க எல்லாம் ஆக்ஸ்போர்டு, சாம்பவிகா, பிரான்சிஸ் ஆகிய பள்ளிகளில் இருந்து வந்திருக்கோம். எங்க தெருவுல வீடு வீடா உண்டியல் கொண்டு போய் கஜா புயலுக்கு பாதிக்கப்பட்டவுங்களுக்கு உதவணும்னு பணம் கொடுங்கனு கேட்டோம்.

உங்ககிட்ட பணம் கொடுத்தா யார்கிட்ட கொடுப்பீங்கனு கேட்டாங்க. எங்க டியூசன் டீச்சர் கலெக்டர்கிட்ட கொடுக்க போறோம்னு சொன்னாங்கனு சொன்னோம். சரி நீங்க பணத்தை கலெக்டர்கிட்ட கொடுத்தால் பேப்பர்ல செய்தி வரும் அப்பதான் நாங்க நம்புவோம்னு பணம் கொடுத்தவுங்க சொல்லியிருக்காங்க" என்றார்.