Published:Updated:

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா திடீர் ராஜினாமா!

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா திடீர் ராஜினாமா!
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா திடீர் ராஜினாமா!

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகப் பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொருளாதார ஆலோசனைக் குழுவை பிரதமர் மோடி அமைத்தார். 5 பேர் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக, நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக் தேவ்ராய் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் பொருளாதார நிபுணர் சுர்ஜித் பாலா பகுதி நேர உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில், பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் பகுதிநேர உறுப்பினர் பதவியிலிருந்து டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து விலகுகிறேன் என சுர்ஜித் பல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில்தான் ஆளுநர் பொறுப்பிலிருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்போது பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து சுர்ஜித் பல்லா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.