Published:Updated:

‘அமைச்சர்கள் வருவதால் அகற்றப்படுகிறோம்..!’ - சாலையோரம் வசிக்கும் மக்களின் குமுறல்

‘அமைச்சர்கள் வருவதால் அகற்றப்படுகிறோம்..!’ - சாலையோரம் வசிக்கும் மக்களின் குமுறல்
‘அமைச்சர்கள் வருவதால் அகற்றப்படுகிறோம்..!’ - சாலையோரம் வசிக்கும் மக்களின் குமுறல்

திருப்பூரில் கடந்த 15 வருடங்களாக சாலையோரத்தில் வசித்து வந்த பொதுமக்களை அ.தி.மு.க நிர்வாகி ஒருவரின் உணவகத் திறப்பு விழாவுக்கு இடையூறாக இருப்பார்கள் என்று சொல்லி வலுக்கட்டாயமாக  அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘அமைச்சர்கள் வருவதால் அகற்றப்படுகிறோம்..!’ - சாலையோரம் வசிக்கும் மக்களின் குமுறல்

திருப்பூர் கஜலெட்சுமி தியேட்டர் சாலையை ஒட்டியுள்ள நொய்யல் நதிக்கரையோரம் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாகக் குடில்கள் அமைத்துத் தங்கி வருகிறார்கள். பினாயில் மற்றும் கயிறு கூடைகளை சொந்தமாகத் தயாரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்களின் குழந்தைகள் பலரும் அருகில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்தநிலையில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த அன்பகம் திருப்பதி என்பவர் இப்பகுதியில் புதிதாக ஓர் உணவகம் திறக்கவிருக்கிறார். அதன் திறப்பு விழா நிகழ்வுக்கு அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாளைய விழா நிகழ்வுக்கு அப்பகுதியில் சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பெரும் இடைஞ்சலாக இருப்பார்கள் என்று எண்ணிய அன்பகம் திருப்பதியின் தரப்பு, திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி காவல்துறையின் உதவியுடன் அம்மக்களை இன்று வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சியில் இறங்கினார்கள்.

‘அமைச்சர்கள் வருவதால் அகற்றப்படுகிறோம்..!’ - சாலையோரம் வசிக்கும் மக்களின் குமுறல்

அதற்காக வீரபாண்டி என்ற பகுதியில் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகளை வழங்குவதாகக் கூறி அவர்களை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர் அதிகாரிகள். ஆனால், அவர்களை கூட்டிச் சென்று இறக்கிவிட்ட இடம் தனியாருக்குச் சொந்தமானது என்பதால், ஏமாற்றமடைந்த அம்மக்கள் பின்னர் மீண்டும் அங்கிருந்து கிளம்பி நொய்யல் நதிக்கரைக்கே வந்து போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். 

அப்போது பேசிய மக்கள், ``எங்களுக்கு முதலிபாளையம் என்ற பகுதியில் ஏற்கெனவே தமிழக அரசு வீட்டுமனை பட்டாக்களை வழங்கியிருக்கிறது. ஆனால், அதே இடத்தில் வேறு சிலருக்கும் பட்டாகளை போட்டுக் கொடுத்திருக்கிறது. இதனால் எங்களால் அந்த இடத்துக்குச் சென்று வசிக்க முடியவில்லை. இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனுக்களை அளித்திருக்கிறோம். இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், இப்போது ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டல் திறக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக எங்களை இப்படி அழைத்துச் சென்று அலைக்கழிக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக எங்கள்மீது அக்கறை செலுத்தாத அரசு நிர்வாகம், இப்போது மட்டும் ஏன் அதீத கரிசனம் காட்டுகிறார்கள் என்று கொந்தளித்தார்கள் அம்மக்கள். சொந்த மக்களை அகதிகளாக ஓடவிட்டு ஹோட்டலும் திறப்பார்கள்... ஹோமமும் நடத்துவார்கள்..!