Published:Updated:

விரைவில் சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் ஆட்டோ சேவை! அசத்தும் `மக்கள் ஆட்டோ'

விரைவில் சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் ஆட்டோ சேவை! அசத்தும் `மக்கள் ஆட்டோ'
விரைவில் சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் ஆட்டோ சேவை! அசத்தும் `மக்கள் ஆட்டோ'

தமிழகத்தில் விரைவில் சுற்றுச்சூழலை கெடுக்காத க்ரீன் ஆட்டோ சர்வீஸை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்" என்று  கூறினார் 'மக்கள் ஆட்டோ'வின் நிர்வாகி மன்சூர் அலி.

'மக்கள் ஆட்டோ' சேவையை  மதுரையில் தொடங்கி வைத்தவர், நம்மிடம் பேசும்போது, ``ஆட்டோவில் பயணிப்பது என்பது முன்பு ஒரு பிரச்னையாக இருந்தது. மீட்டர் கான்செப்டே இல்லாமல் இருந்தது. ஆட்டோ டிரைவர்கள் பற்றி மோசமான இமேஜ் இருந்தது. இதைப் பயன்படுத்திக்கொண்டு கார்ப்பரேட் கம்பெனிகள் கால் டாக்சிகளைக் கொண்டு வந்தனர். இதனால் ஆட்டோ தொழில் ஆட்டம் காண ஆரம்பித்தது.

ஆட்டோ தொழிலை மிகவும் நேசிக்கும் நான், 2013-ல் நண்பர்களுடன் சேர்ந்து 'நம்ம ஆட்டோ' என்ற சர்வீஸை கொண்டு வந்தேன். அதில் முதல்முறையாகக் கிலோ மீட்டருக்கு இவ்வளவுதான் எனக் கட்டணம் நிர்ணயம் செய்தோம். அதுக்கு பின்புதான் ஆட்டோ தொழில் மீண்டும் டெவலப் ஆச்சு. அதன் பின்பு, 'மக்கள் ஆட்டோ' வை தொடங்கினேன். சென்னை, திருச்சிக்குப் பிறகு என்னுடைய சொந்த மண்ணான மதுரையில் இச்சேவையை தொடங்கியுள்ளேன். 

ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடிகள் புழங்குவதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்டோ தொழிலுக்கு வந்து விட்டார்கள். ஆரம்பத்தில் ஆஃபர் கொடுத்தார்கள். இப்பொழுது டிரைவர்களிடம் கமிஷன் வாங்கத் தொடங்கிவிட்டார்கள். எங்களது சேவையில்  கார்ப்பரேட் நிறுவனங்களை விடக் குறைவாக கட்டணம் நிர்ணயித்துள்ளோம். எங்களுக்கு லாபம் முக்கியமல்ல. ஆட்டோ டிரைவர்களுக்கும் மக்களுக்கும் பாலமாக இருக்கிறோம். எங்களுடைய செயலி எல்லோரும் பயன்படுத்தும் வகையில் ஆங்கிலம், தமிழில் இருக்கும்.

விரைவில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத க்ரீன் ஆட்டோக்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவுள்ளோம். இது ஆட்டோ டிரைவர்களுக்கு இன்னும் லாபம் தரக் கூடியது. அதுபோல் ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு மாதம் 25 கிலோ அரிசி வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். அவர்களின்  குடும்பத்தினருக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ், இலவச ஆம்புலன்ஸ் வசதி கொண்டு வருகிறோம்" என்றார்.