Published:Updated:

"கரூர் எப்போதும் எங்கள் கோட்டை!'- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"கரூர் எப்போதும் எங்கள் கோட்டை!'- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
"கரூர் எப்போதும் எங்கள் கோட்டை!'- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.கவினர் பலரை தி.மு.கவுக்கு இழுக்க முயல்வதாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ``கரூர் மாவட்டம் எப்போதும் அ.தி.மு.க கோட்டைதான். எப்போது, எந்தத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கதான் ஜெயிக்கும்" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், வெஞ்சமாங்கூடலூர், ஈசநத்தம், அம்மாப்பட்டி, எருமார்ப்பட்டி, ஜ.ஆலமரத்துப்படி, அரவக்குறிச்சி ஆகிய ஊராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிக்குப்பட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 305.75 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜையிட்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.

வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சியில், கரும்பரப்பு ஏ.டி.காலணியில் ரூ.6.64 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கும், செட்டியார் கவுண்டனூரில் ரூ.4.00 லட்சம் மதிப்பில் 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைப்பதற்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதேபோல், கள்ளிமரத்துப்பட்டியில் ரூ.31.45 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு செய்யும் பணியினையும், ஈசநத்தத்தில் ரூ.6.00 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைப்பதற்கும், அம்மாப்பட்டி ஊராட்சி வல்லம்பட்டியில் ரூ.25.10 லட்சம் மதிப்பில் மயானக்கொட்டகை மற்றும் சாலை மேம்பாடு செய்வதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. அதோடு, ஜ.ஆத்தூர் ஏ.டி.காலணியில் ரூ.8.14 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கும், ரூ.2.50 லட்சம் மதிப்பில் வடிகால் அமைப்பதற்கும், ரூ.6.21 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கும், எருமார்ப்பட்டி ஊராட்சி பண்ணப்பட்டியில் ரூ.0.64 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பழுதுநீக்கம் செய்யும் பணிக்கும், ரூ.10.94 லட்சம் மதிப்பில் வடிகால் வசதி அமைப்பதற்கும், ஜ.ஆலமரத்துப்பட்டி ஊராட்சி ஆண்டிப்பட்டியில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் நாடகமேடை அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் செய்யப்பட இருக்கின்றன.

ல்

 ஜ.ஆலமரத்துப்பட்டியில் 25 பயனாளிகளுக்கும், ஜ.ஆத்தூர் ஏ.டி.காலணியில் 10 பயனாளிகளுக்கும் வீடுகளை
பழுதுநீக்கிக்கொள்ள ரூ.18.94 லட்சம் மதிப்பில் உத்தரவும் என ரூ.305.75 லட்சம் மதிப்பிலான புதிய பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்து, பணிகளை விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போது செய்தியாளர்கள், ``செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்கு அ.தி.மு.க-வினர்களை இழுக்கப் போவதாகச் சொல்கிறார்களே. அதேபோல், கரூரில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.கவை ஜெயிக்க வைப்பதாக அவர் சொல்கிறாரே" என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், ``கரூர் மாவட்டம் எப்போதும் அ.தி.மு.க கோட்டை. எப்போது எந்தத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கதான் ஜெயிக்கும். அதேபோல், இந்த ஆட்சி இன்னும் இரண்டரை வருடங்களை முழுமையாகக் கடந்து ஆட்சி செய்யும்" என்றார்.