Published:Updated:

குடும்பத்தினருடன் பிள்ளையார்பட்டியில் சுவாமி தரிசனம்செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்!

குடும்பத்தினருடன் பிள்ளையார்பட்டியில் சுவாமி தரிசனம்செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்!
குடும்பத்தினருடன் பிள்ளையார்பட்டியில் சுவாமி தரிசனம்செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்!

உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தனது குடும்பத்துடன் பிள்ளையார்பட்டி வந்து, கற்பகவிநாயகரைத் தரிசனம் செய்ததோடு, பல்வேறு பூஜைகள் செய்து வழிபட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில்,  உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், தனது குடும்பத்தினருடன்  சுவாமி தரிசனம் மேற்கொண்டு, சாந்தி கல்யாணம் செய்துகொண்டார். 

பிள்ளையார்பட்டிக்கு வருகைதந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், குடும்பத்தினருக்கு திருக்கோயில் அறங்காவலர்கள் அமராவதிபுதூர் அண்ணாமலை செட்டியார், தேவகோட்டை  இ.நாகப்பன் செட்டியார் ஆகியோர், கிழக்கு கோபுர வாயிலில் வரவேற்பு அளித்தனர். பின்னர் சங்கல்பம் நடைபெற்று, குடும்பத்துடன் அருள்மிகு கற்பக விநாயகரை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள மருதீஸ்வரர் ஆலயம் முன்பு தனது சஷ்டியப்த பூர்த்தியான சாந்தி கல்யாணத்தைக் கொண்டாடும் வகையில், அவரது மனைவி வாணிகிஷன் கவுல் கழுத்தில் புது திருமாங்கல்யம் அணிவித்து மாலை மாற்றிக்கொண்டனர்.

பின்னர், அவரது குடும்பத்தினர் மற்றும் நீதிபதிகள் ஆசி பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற கணபதி பூஜை மற்றும் கோபூஜையில் கலந்து கொண்ட பின், காரைக்குடி புறப்பட்டுச் சென்றார்.  இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமசாமி,  திருப்பத்தூர் வட்டாட்சியர் தங்கமணி மற்றும் மாவட்ட நீதிபதிகள் அனைவரும் கலந்துகொண்டனர். 

நேற்று, மதுரை விமானநிலையம் வந்தடைந்த நீதிபதி சஞ்சய் கவுலுக்கு,  தென்மாவட்டங்களில் உள்ள  நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், போலீஸ் உயரதிகாரிகள், அவரை வரவேற்பதற்காக விமானநிலையத்தில் காத்திருந்தனர். அதன் பிறகு, சில நீதிபதிகள் மட்டும் நீதிபதி கவுலுடன் பிள்ளையார்பட்டிக்குச் சென்றனர்.