Published:Updated:

`எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள்!’ - மெழுகுவத்தி ஏந்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

`எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள்!’ - மெழுகுவத்தி ஏந்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
`எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள்!’ - மெழுகுவத்தி ஏந்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

பணி நிரந்தரம் மற்றும் அறிவிக்கப்பட்ட ஊதியம் வழங்கக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையில் அரசு ஒளி ஏற்ற வேண்டும் எனக் கையில் மெழுகுவத்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டம் நடத்திவருகின்றனர். மதுரையைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர்கள் மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மின்வாரியம் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். இன்று அரசு தங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் எனக்கோரி மெழுகுவத்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பணி நிரந்தரம் செய்து தருவதாகக் கூறி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை ஏமாற்றிவரும் மின்துறை அமைச்சரைக் கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பேரிடர் காலங்களின்போது பணி நிரந்தரம் செய்வோம் என ஏமாற்றி அழைத்துச் சென்று தற்போது கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதாகவும் குறைந்தபட்ச ஊதியமாக 380 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்றாமல் தாமதப்படுத்திவருவதாகவும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.