Published:Updated:

``அரசுத்துறை வேலைவாய்ப்பை அழித்தொழிக்கும் தமிழக அரசு” -வாலிபர் சங்க மாநாட்டில் கண்டனம்

``அரசுத்துறை வேலைவாய்ப்பை அழித்தொழிக்கும் தமிழக அரசு” -வாலிபர் சங்க மாநாட்டில் கண்டனம்
``அரசுத்துறை வேலைவாய்ப்பை அழித்தொழிக்கும் தமிழக அரசு” -வாலிபர் சங்க மாநாட்டில் கண்டனம்

அரசுத்துறை வேலை வாய்ப்பை அழித்தொழிக்கும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதற்குச் சிவகங்கையில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16-ஆவது மாநில மாநாடு கடும் கண்டம் தெரிவித்துள்ளது.

``அரசுத்துறை வேலைவாய்ப்பை அழித்தொழிக்கும் தமிழக அரசு” -வாலிபர் சங்க மாநாட்டில் கண்டனம்

இது தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், தமிழக அரசு வேலைவாய்ப்பை  வழங்குவதில் முழு தோல்வி அடைந்து விட்டது. அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் அரசுத் துறை வேலைவாய்ப்பை முற்றிலும் அழித்தொழிக்கக்கூடிய செயலாகஉள்ளது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பேராசிரியர் துவங்கி அலுவலக உதவியாளர் பணி வரை நியமனங்களில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. 

அரசின் கொள்கை காரணமாகத் தனியார் துறை வேலைவாய்ப்பும் உயரவில்லை. தற்சமயம் 50 ஆயிரம் சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்ட நிலையில் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஏற்கனவே பாக்ஸ்கான், நோக்கியா உள்ளிட்டபெரும் தொழிற்சாலைகள் மூடப்பட்டது.  இப்போது சிறிய தொழில் நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை தருவதில்  சிறிய தொழில் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

அரசுத்துறை, பொதுத்துறை, தனியார் துறைகளில்   வேலை வாய்ப்பு வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. தமிழகத்தில் இக் காலத்தில் பொதுத்துறையில் பணிநியமனம் இல்லை  என்றே கூறலாம். வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய துறைகளில்  வேளாண்துறையும், சேவைத்துறையும் உள்ளது. வேளாண்மை சார்ந்த வேலைவாய்ப்பை உருவாக்க எந்தத் திட்டங்களும் இல்லை. சுயவேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமான உருவான வேலைவாய்ப்புகளும் மிகக் குறைவாகவே உள்ளன.    

மருத்துவமனை, சிறுதொழில் நிறுவனங்கள், சேவைத்துறை, பல்வேறு வகையான அங்காடிகள், உணவகங்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிபவர்கள் பணிச்சூழல் அவலம் நிறைந்ததாகவே உள்ளது. குறிப்பாக, இளம் பெண்களின் பணிச் சூழல் மிக மோசமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றத் தலையிட வேண்டிய அரசு மௌனமாகவே உள்ளது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டப்படிப்பு நிறைவு செய்யும் மாநிலத்தில் புதிய  வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், சமூக பாதுகாப்பும் சட்ட பாதுகாப்பும் கூடியதாக தற்போது உள்ள வேலைவாய்ப்புகளை மாற்ற வேண்டிய கடமையிலிருந்து தமிழக அரசு தவறி வருவதை மாநாடு  வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இப்போக்கை கைவிட்டு சமூக, சட்ட பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசாணை 56-ஐ  ரத்து செய்ய வேண்டும். அரசு, பொதுத் துறை காலிப் பணியிடங்களை உடனடியாக  நிரப்ப வேண்டும்” என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.