Published:Updated:

"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்கணும்!" - தம்பிதுரை கோரிக்கை

"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்கணும்!" - தம்பிதுரை கோரிக்கை
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்கணும்!" - தம்பிதுரை கோரிக்கை

"மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை சூட்டவேண்டும்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

கரூரில் சிறுகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் முதலீட்டாளர்களுக்கான தெருமுனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அப்போது அவர் கூறுகையில்,   "தமிழகத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும். தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டங்களில் மக்களை சென்று சந்திப்போம் என்று கூறியது பற்றி கேட்கிறீர்கள். அவர் ஏற்கனவே மக்களை தேடி சென்ற நிகழ்ச்சிகள் தோல்வி அடைந்துவிட்டது போலதான் இதுவும் இருக்கும். அவரது அந்த முயற்சி பலனை தராது. அ.தி.மு.க-வுக்கு, பா.ஜ.க-வுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதனால்,கூட்டணி குறித்து எனக்குத் தெரிந்து யாரும் பா.ஜ.வுடன் பேசவில்லை. பா.ஜ.க தரப்பும் எங்களிடம் பேசவில்லை" என்றார்.