Published:Updated:

சி.பி.எம். கொடிக்கம்பங்கள் உடைப்பு - கேரளாவைத் தொடர்ந்து குமரியிலும் பதற்றம் #சபரிமலை

சி.பி.எம். கொடிக்கம்பங்கள் உடைப்பு - கேரளாவைத் தொடர்ந்து குமரியிலும் பதற்றம் #சபரிமலை
சி.பி.எம். கொடிக்கம்பங்கள் உடைப்பு - கேரளாவைத் தொடர்ந்து குமரியிலும் பதற்றம் #சபரிமலை

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் கேரள மாநிலத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் போராட்டம் பரவியுள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகியோர் நேற்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தனர். 45 வயதுக்கும் குறைவான பெண்கள் சந்நிதானத்துக்குச் சென்றதால் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு கேரளத்தில் பா.ஜ.க. போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இன்று கேரளத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

சபரிமலை தொடர்பான போராட்டங்கள் கேரளத்தில் தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் போராட்டம் பரவியுள்ளது. நாகர்கோவிலை அடுத்த நாக்கால்மடம் பகுதியில் தமிழக அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. மார்த்தாண்டம் அருகே உண்ணாலைக்கடை பயணிகள் நிழற்குடையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உருவப் படத்துக்கு மர்மநபர் சிலர் செருப்பு மாலை அணிவித்திருந்தனர்.

தகவலின்பேரில் போலீஸார் சென்று அந்தப் படத்தை அகற்றினார்கள். நாகர்கோவில் வைராவிளை, செம்பன்காலை பகுதியில் நான்கு சி.பி.எம்.கொடிக்கம்பங்கள் உடைக்கப்பட்டன. குமரி மாவட்டத்தில் நான்கு இடங்களில் கேரள முதல்வர் பினராயி விஜயன் படம் எரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.