Published:Updated:

நன்னடத்தை சான்றிதழுக்கு அலைய வேண்டாம்: வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

நன்னடத்தை சான்றிதழுக்கு அலைய வேண்டாம்: வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!
நன்னடத்தை சான்றிதழுக்கு அலைய வேண்டாம்: வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கால விரயம் மற்றும் பண விரயத்தைக் குறைக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் நன்னடத்தை சான்றிதழ் பெறும் திட்டத்தை அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார் 

காவல்துறை மூலம் தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வோர் குறித்த விவரம் சரிபார்ப்பு, வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரங்கள் சரிபார்ப்பு  உள்ளிட்ட பல்வேறு நன்னடத்தை சான்றிதழ் பெறுவதற்காகப் பொதுமக்கள் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் இணையதள சேவை மூலம் நன்னடத்தை சான்றிதழ் பெறும் திட்டத்தை அரியலூரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்

இதன்மூலம் நன்னடத்தை சான்றிதழ் பெறுபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் அவர்களுக்கான நன்னடத்தை சான்றிதழ் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதற்கான கட்டணத்தை ஆன் லைன் மூலம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நன்னடத்தை சான்றிதழ் பெறும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கால விரயம் மற்றும் பண விரயமும் தவிர்க்கப்படும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.