Published:Updated:

ஜல்லிக்கட்டு விழா - தோகைமலை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஜல்லிக்கட்டு விழா - தோகைமலை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஜல்லிக்கட்டு விழா - தோகைமலை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட ராசாண்டார் திருமலைப் பகுதியில், ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் ஆய்வுசெய்தார்.

கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசாண்டார் திருமலைப் பகுதியில் வரும் 17.1.2019 அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ள இடத்தில், அரசு விதிகளுக்குட்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள்குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் ஆய்வுசெய்தார். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் மழை, வெயில் பாதிக்காமல் இருக்க கூடாரம் அமைக்கப்பட வேண்டும் என்றும், காளை ஓடும் பகுதியின் இரண்டு புறங்களிலும் பார்வையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் உறுதியான இரும்பு சட்டங்கள் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதோடு, காளைகள் கடைசியாக வந்தடையும் இடத்தில், அவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்க தேவையான ஏற்பாடுகள் அமைக்கப்பட வேண்டும் என்று விழா ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுரை கூறிய மாவட்ட ஆட்சித்தலைவர், கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் முறையாக ஆய்வுசெய்து, சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

தொடர்ந்து, ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வரும் காளைகள் மற்றும் வீரர்கள் உரிய மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது, பொதுமக்களுக்கும் மாடுபிடிவீரர்களுக்கும் உதவும் வகையில் தன்னார்வலர்கள் இருக்க வேண்டும் என்றும், மாடுபிடி வீரர்களுக்கும் விழாக் குழுவினருக்கும் தனித்தனி நிறங்களில் சீருடை வழங்க வேண்டும் என்றும்
விழாக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், "காளையை அடக்குவோர் 15 மீட்டர் தூரத்திற்கு திமிலை மட்டுமே பிடித்துக்கொண்டு செல்லவேண்டும். வால் மற்றும் காது போன்றவற்றைப் பிடிக்கக் கூடாது. அவ்வாறு செய்யும் வீரர்களை விழாக்குழுவினர் உடனடியாக காவல்துறையினரின் உதவியோடு வெளியேற்ற வேண்டும். போட்டி நடைபெறும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும்பட்சத்தில், உடனடி சிகிச்சை அளிக்கும்பொருட்டு, மருத்துவர்களும், அவசர ஊர்திகளும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைவருக்கும் தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.