Published:Updated:

`இங்கு கலைகள் எல்லோருக்குமானவை!’ - ஒரே மேடையில் அரங்கேறிய பறையும் பரதமும்...

விகடன் விமர்சனக்குழு
`இங்கு கலைகள் எல்லோருக்குமானவை!’ - ஒரே மேடையில் அரங்கேறிய பறையும் பரதமும்...
`இங்கு கலைகள் எல்லோருக்குமானவை!’ - ஒரே மேடையில் அரங்கேறிய பறையும் பரதமும்...

கலை முடிவற்ற, நிறமற்ற, உயிரற்ற ஒன்று. ஆனால், இந்திய சூழலில் அதற்குப் பல வண்ணங்கள் பூசப்பட்டு, அது ஒரு குறிப்பிட்ட வெளிக்குள் வரையறுக்கப்பட்டது. ஆன்மிக அம்சங்களிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் மக்களின் உணர்வுகளுக்குப் பரிந்துரையாக இருந்த கலை, சாதியப் பாகுபாட்டால் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தியது. இதனிலிருந்து தமிழ் மக்களின் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது `தமிழ் மக்கள் கலைவிழா.’ இந்நிகழ்வு கடந்த 15 ஆண்டுகளாகத் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் என்ற ஊரில், `தந்தை பெரியார் அறிவியல் பண்பாட்டு விளையாட்டுக் கழகம்' சார்பில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

`இங்கு கலைகள் எல்லோருக்குமானவை!’ - ஒரே மேடையில் அரங்கேறிய பறையும் பரதமும்...

சிலம்பாட்டம், பொம்மலாட்டம், மல்யுத்தம், பாரம்பர்ய பாடல் கச்சேரி போன்றவை நிகழ்ந்தன. துலும்பு, உருட்டுச் சட்டி போன்ற கருவிகளைப் பயன்படுத்தி துலும்பாட்டம் என்ற கலை செய்துகாட்டப்பட்டது. ஜாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களைவோம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் நிமிர்வு இசைக்குழுவினரின் பறையாட்டம் அடிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, பரதநாட்டியத்தின் ஜதி, தாளத்துக்கேற்ப பறையும், பறையின் முழக்கத்துக்கேற்ப நடனுமுமாகப்  `பறையும் பரதநாட்டியமும்’ ஒரே மேடையில் அரங்கேற்றப்பட்டது. பரதநாட்டியம் சிவனை வழிபடத் தமிழர்கள் கற்றிருந்த கலை, அது அரசர்களின் அரசியலால் தவறானதாக மாற்றப்பட்டது. பிறகு, அந்தக் கலை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கானது மட்டுமே என்று அடையாளப்படுகிறது. `இங்கு கலை எல்லோருக்குமானது!’ என்ற அடிப்படையில் இந்நிகழ்வு அமைக்கப்பட்டது' என்கிறார்கள் நிமிர்வு கலைஞர்கள்.

`இங்கு கலைகள் எல்லோருக்குமானவை!’ - ஒரே மேடையில் அரங்கேறிய பறையும் பரதமும்...

இதுகுறித்துப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ``பண்பாட்டு படையெடுப்புகளின் மூலம் எதைச் சொல்லி நம்மைக் காயப்படுத்தினார்களோ அதன் மூலமே பதில் தரும் வகையில் இன்று பறை முதல் அனைத்துக் கலைகளும் முழங்குகிறது. ஒருவன் எந்த வாயிலின் வழியே சிறைக்குச் சென்றானோ, அதே வழியே திரும்ப வந்தால்தான் அது விடுதலை என்று பெரியார் சொல்வார். அதேபோல், எந்தக் கலையின் வழியே நம்மை அடிமைப்படுத்தினார்களோ, அதன் மூலம் நாம் விடுதலைப் பெறுவதுதான் அடிப்படை தத்துவம்’’ என்றார்.