Published:Updated:

புதுச்சாவடியில் சீறிப்பாய்ந்த காளைகள்! - விமரிசையாக நடந்த 167-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு

புதுச்சாவடியில் சீறிப்பாய்ந்த காளைகள்! - விமரிசையாக நடந்த 167-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு
புதுச்சாவடியில் சீறிப்பாய்ந்த காளைகள்! - விமரிசையாக நடந்த 167-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு

ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தில் 167-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ஆண்டு மிக விமரிசையாக நடைபெற்று  வருகிறது. இதில் 250 காளைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

புதுச்சாவடியில் சீறிப்பாய்ந்த காளைகள்! - விமரிசையாக நடந்த 167-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தில் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு 167-ம் ஆண்டாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்விழாவை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெய லிங்கம்  மற்றும் கோட்டாட்சியர் ஜோதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், தஞ்சாவூர், 
கடலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட  மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றுவருகிறது.

இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுகளை விரட்டிப் பிடித்த வீரர்களுக்கும் பரிசுகளாக சில்வர் குடம், கட்டில், சேர்கள், வெள்ளிக்காசுகள், குத்துவிளக்குகள் ஹாட் பாக்ஸ், பீரோ, சைக்கிள் மற்றும் ரூபாய் 1,000 முதல் 10,000  வரைவழங்கப்பட்டது.  போட்டியைக் காண  அருகில் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் பார்வையாளர்கள் இளைஞர்கள் என 2 
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

புதுச்சாவடியில் சீறிப்பாய்ந்த காளைகள்! - விமரிசையாக நடந்த 167-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு

இவ்விழாவில் காயமடைந்த வீரர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுவினரும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்  துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். மேலும், அசம்பாவிதங்கள்  எதுவும் நடக்காத வண்ணம்பாதுகாக்கும்  பணியில்  அரியலூர்  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில்  டி.எஸ்.பி கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் என  நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.