Published:Updated:

ஆளுநருக்காக தூவப்பட்ட குப்பைகள்? - ஊட்டியில் தூய்மை இந்தியா உறுதிமொழி நிகழ்ச்சி!

கே.அருண்
ஆளுநருக்காக தூவப்பட்ட குப்பைகள்? - ஊட்டியில் தூய்மை இந்தியா உறுதிமொழி நிகழ்ச்சி!
ஆளுநருக்காக தூவப்பட்ட குப்பைகள்? - ஊட்டியில் தூய்மை இந்தியா உறுதிமொழி நிகழ்ச்சி!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், தூய்மை இந்தியா திட்டத்திற்கான உறுதிமாெழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துப்புரவுப் பணியில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பில் குப்பைகளை அட்டைப் பெட்டியில் சேமித்துவைத்து ரோட்டில் தூவிய துப்புரவு பணியாளர்கள் ஏமாறும் விதமாக, துப்புரவுப் பணியில் ஈடுபடாமல் கிளம்பினார். 

ஆளுநருக்காக தூவப்பட்ட குப்பைகள்? - ஊட்டியில் தூய்மை இந்தியா உறுதிமொழி நிகழ்ச்சி!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மத்திய நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மையத்தின் 28-வது தேசிய மாநாட்டைத்  தொடங்கி வைப்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை ஊட்டி வந்தார். காலை 10.30 மணியளவில், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கியும், மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டும் பேசினார்.

ஆளுநருக்காக தூவப்பட்ட குப்பைகள்? - ஊட்டியில் தூய்மை இந்தியா உறுதிமொழி நிகழ்ச்சி!

இதைத் தாெடர்ந்து, ஆளுநர் பங்கேற்கும் தூய்மை இந்தியா தாெடர்பான நிகழ்ச்சி 3.30 மணிக்கு நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்காக ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், சுமார் 3 மணி முதல் ஊட்டி பஸ் ஸ்டாண்டு எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு எதிரே, வெயிலில் காக்கவைக்கப்பட்டிருந்தனர். 

ஆளுநருக்காக தூவப்பட்ட குப்பைகள்? - ஊட்டியில் தூய்மை இந்தியா உறுதிமொழி நிகழ்ச்சி!

ஆளுநர் வர ஒரு மணி நேரம் தாமதமானதால், வெயிலின் தாக்கத்தால் மாணவியர் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.  ஆளுநர், தான் செல்லும் இடங்களில் துப்புரவுப் பணியில் ஈடுபடுவதை வழக்கமாகக்கெண்டிருப்பதை அறிந்த துப்புரவுப் பணியாளர்கள்,  அட்டைப்பெட்டியில்  குப்பைகளை எடுத்து  வந்திருந்தனர்.

ஆளுநருக்காக தூவப்பட்ட குப்பைகள்? - ஊட்டியில் தூய்மை இந்தியா உறுதிமொழி நிகழ்ச்சி!

மேலும், அதை ஆளுநர் அமர்ந்திருந்த அரங்கிற்கு எதிராகத் தூவினர். இதற்கிடையே, தூய்மை இந்தியா உறுதிமொழியை ஆளுநர் வாசிக்கத் தயாரானார். தான் வாசிப்பதைப் பார்வையாளர்கள் அனைவரும் திரும்பச் சொல்ல வேண்டும் என்றார். பெரும்பாலானவர்கள் அவர் வாசித்த உறுதிமாெழியை திரும்பக் கூறவில்லை.

ஆளுநருக்காக தூவப்பட்ட குப்பைகள்? - ஊட்டியில் தூய்மை இந்தியா உறுதிமொழி நிகழ்ச்சி!

எதிரே இருந்தவர்கள், தங்களுக்குக் கேட்கவில்லை என்றும் கூறினர். ஆங்கிலத்தில் வாசிப்பதால் யாரும் திரும்பக் கூறவில்லை என்று எண்ணி, தமிழில் உறுதி மாெழியை வாசிக்கும்படி அருகில் இருந்தவர்களை அழைத்து வாசிக்கக் கூறியவர், திடீரென மேடையைவிட்டு  இறங்கி, எதிரே இருந்தவர்களை நோக்கி வந்து, இங்கு நன்றாகக் கேட்கிறதே என்று கூறி புன்னகைத்து விட்டு மீண்டும் மேடைக்கு வந்தார். தாெடர்ந்து தூய்மை ரதத்தைக் காெடியசைத்துத்  தொடங்கிவைத்த ஆளுநர், துப்புரவுப் பணியில் ஈடுபடாமல் கிளம்பிவிட்டார்.