Published:Updated:

`தேன் கூட்டை கலைக்கத்தான் தீயைப் பற்றவைத்தோம்!’ - ஜல்லிக்கட்டு விசாரணையில் போலீஸார் தகவல்

`தேன் கூட்டை கலைக்கத்தான் தீயைப் பற்றவைத்தோம்!’ - ஜல்லிக்கட்டு விசாரணையில் போலீஸார் தகவல்
`தேன் கூட்டை கலைக்கத்தான் தீயைப் பற்றவைத்தோம்!’ - ஜல்லிக்கட்டு விசாரணையில் போலீஸார் தகவல்

தேன் கூட்டைக் கலைக்கத்தான் தீ பற்றவைத்தோம் எனப் போலீஸ் விளக்கம் அளித்ததாக விசாரணை அதிகாரி மதுரையில் பேட்டி அளித்தார்.

'வாடிவாசல் திறக்கும்வரை... வீடு வாசல் போகமாட்டோம்’ என்று அலங்காநல்லூரில் 2017 ஜனவரி 16-ம் தேதி ஆரம்பித்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போராட்டம் தமிழகம் முழுவதும் இளைஞர்களாலும் மாணவர்களாலும் பொதுமக்களாலும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது; சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள்கூடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது; இதன் தொடர்ச்சியாக வெளிமாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆதரவு பெருகியது. இதைக் கண்டு உலக நாடுகளே தமிழகத்தைத் திரும்பிப் பார்த்ததுடன், இந்தப் போராட்டம் வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொள்ளத் தூண்டுகோலாக இருந்தது. இதன் விசாரணை கமிஷன் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுத் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை மதுரையில் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழு விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ``அலங்காநல்லூர் போராட்டத்தின் முடிவில் காவல்துறை செய்தது சரி என்றே அதிகமானோர் விளக்கம் கொடுத்துள்ளனர். 22-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வந்த அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகப் போராடியதாகவும் நாங்கள் நடத்த நினைத்தபோதும் போராட்டத்துக்கு வந்தவர்கள் மக்களை திசை திருப்பியதாகவும் தெரிவித்தனர். சென்னையில் இன்னும் 16 பேரிடம் மனுக் கொடுத்தவர்களிடம் விசாரிக்க உள்ளோம். மார்ச் மாதத்திலிருந்து 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். சென்னையில் வாகனங்களுக்குக் காவல்துறை தீ வைத்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்தவர்கள், தேன்கூடு மீது கல் எறிந்தபோது குழவிகள் மக்களைக் கொட்ட வந்ததாகவும் அதைத் தடுக்க காவல்துறையினர் தீப்பந்தத்தை வைத்து விரட்டியதாகவும் சாட்சியம் அளித்துள்ளதாகத்’’ தெரிவித்தார்.