Published:Updated:

`மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சியா?' - வீரபாண்டி ஆறுமுகம் மகனைச் சுற்றும் சர்ச்சை!

சேலம்

`மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சியா?' - வீரபாண்டி ஆறுமுகம் மகனைச் சுற்றும் சர்ச்சை!
`மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சியா?' - வீரபாண்டி ஆறுமுகம் மகனைச் சுற்றும் சர்ச்சை!

தி.மு.க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அனைவராலும் சிறந்த தலைவராகப் புகழப்பட்டார். ஆனால், அவர் இறுதிக் காலத்தில் சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு சம்பவம் அவர் மீது தீராத கலங்கத்தை ஏற்படுத்தியதோடு மரணத்துக்கே காரணமாகவும் அமைந்தது. அவரின் மகனும் தி.மு.க சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திரன் என்கிற ராஜா மீதும் தற்போது நில அபகரிப்பு புகார் வந்திருக்கிறது. 

`மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சியா?' - வீரபாண்டி ஆறுமுகம் மகனைச் சுற்றும் சர்ச்சை!

வீரபாண்டி ராஜாவுக்குச் சொந்தமான வி.எஸ்.ஏ., கல்லூரி சேலம் டு கோவை பைபாஸ் சாலையில் பில்லுக்கடை மேட்டில் அமைந்துள்ளது. இக்கல்லூரிக்கு அருகே பாப்பாத்தி அம்மாளுக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. வீரபாண்டி ராஜாவின் ஆட்கள் அந்த நிலத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 9 பனை மரங்களை வெட்டிச் சாய்த்து விட்டு தண்ணீர் தொட்டியை உடைத்து விட்டுப் போனதாக சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

`மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சியா?' - வீரபாண்டி ஆறுமுகம் மகனைச் சுற்றும் சர்ச்சை!

இதுபற்றி பாப்பாத்தி அம்மாளிடம் கேட்டபோது, ``எங்க வீட்டுக்காரர் பெயர் சுப்ரமணி, அவர் இறந்து 25 வருஷத்துக்கு மேல் ஆயிடுச்சு. எனக்குச் சரவணன், சந்திரா, செந்தில்குமார் என 3 பிள்ளைகள். எல்லோருக்கும் திருமணமாகி தனித்தனியே இருக்காங்க. எங்க கணவரின் குடும்பத்துக்குப் பூர்வீக சொத்து வி.எஸ்.ஏ கல்லூரியை ஒட்டியது போல 2 1/2 ஏக்கர் இருக்கிறது. இதில் எங்களுக்கு 1 1/4 ஏக்கரும், என் கொலுந்தனார் ஜெயபாலுக்கு 1 1/4 ஏக்கரும் சேரும்.

இந்த நிலத்தில் விவசாயம் செய்து என் பிள்ளைகளை வளர்த்து, படிக்க வைத்தேன். தற்போதும் இந்த நிலத்தில் உழுது அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். இந்த நிலையில் என் கொலுந்தனார் 2010ல் பாகப்பிரிவினை செய்யாமல் நிலத்தை வீரபாண்டி ராஜாவுக்கு விற்று விட்டார். வீரபாண்டி ராஜா எங்க நிலத்தைப் பிரித்து கொடுக்காமல் அபகரிக்க நினைக்கிறார். 2017ல் எங்க பாகத்தில் இருந்த 16 தென்னை மரங்களை வீரபாண்டி ராஜாவின் அடியாட்கள் வெட்டினார்கள். நாங்க ஏழை என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை.

கடந்த மாதம் நான் ரேஷன் கடைக்குப் போயிட்டேன். அப்போது  எங்க காட்டில் இருந்த 9 பனை மரங்களை வெட்டியதோடு தண்ணீர் தொட்டியை இடிச்சுட்டு போயிட்டாங்க. எங்க பசங்க வெளியூரில் இருக்காங்க. ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழுகிறேன்.

`மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சியா?' - வீரபாண்டி ஆறுமுகம் மகனைச் சுற்றும் சர்ச்சை!

தொடர்ந்து போனில் மிரட்டுறாங்க. வீரபாண்டி ராஜாவின் அப்பாவுக்கு உதவியாளராக இருந்த ஆத்துகாட்டு சேகர் என்னைக் காயம் இல்லாமல் அடித்துக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். என் உயிருக்கு ஏதாவது ஆனால் வீரபாண்டி ராஜா, ஆத்துக்காட்டு சேகர், ராமலிங்கம், ராஜேந்தின் இவர்கள் தான் பொறுப்பு" என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதுபற்றி தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளரும், வி.எஸ்.ஏ கல்லூரி சேர்மனுமான வீரபாண்டி ராஜாவிடம் பேசியதற்கு, ``இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது சம்பந்தமாக பேச வேண்டுமென்றால் என் மேலாளரிடமும், வழக்கறிஞரிடமும் கேளுங்கள்'' என்றார்.