Published:Updated:

கஜா புயலால் சரிந்த மின் கம்பம்; யாரைக் காவு வாங்கப் போகிறதோ?- அச்சத்தில் கிராம மக்கள்

கஜா புயலால் சரிந்த மின் கம்பம்; யாரைக் காவு வாங்கப் போகிறதோ?- அச்சத்தில் கிராம மக்கள்
கஜா புயலால் சரிந்த மின் கம்பம்; யாரைக் காவு வாங்கப் போகிறதோ?- அச்சத்தில் கிராம மக்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பம் இன்றுவரை சரி செய்யப்படாததால் யாருடைய உயிரைக் காவு வாங்கப் போகிறதோ என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் பகுதிகளில், கடந்த நவம்பர் 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவர்களால் முழுமையாக மீண்டு வரமுடியாத சூழலில்தான் உள்ளனர். டெல்டா மாவட்டங்களில்தான் பணிகள் விரைவாக நடைபெறவில்லை என்றால் மிகக்குறைந்த அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்கூட பணிகள் முடிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த எட்டிமங்கலத்தைச் சேர்ந்த மணிமாறன் கூறுகையில், ``கஜா புயலால் எங்கள் கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விவசாய நிலங்கள் புயலால் சூறையாடப்பட்டது. மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்ததில் ஏராளமான இடங்களில் மின் கம்பங்கள் பாதித்தன. எனது வீடு அருகே உள்ள வயல் பகுதியில் இருந்த போஸ்ட் மரம் பாதி அளவுக்கு சாய்ந்தது. அதைத் தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தற்கு விவசாயம் நடைபெறுகிறது. கதிர் அறுத்ததற்கு பின் சரி செய்கிறோம்'' என்றனர்.

விவசாயப் பணிகள் முடிந்து பல வாரங்கள் ஆகியும் இன்று வரை சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் யாருடைய உயிரை இந்த மின்கம்பம் காவு வாங்க உள்ளதோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் கிராமத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களை மின்கம்பங்கள் சரிசெய்யவேண்டும் எனத் தெரிவித்தார்.